பதிவு செய்த நாள் :
கருத்துகள் (28)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: வங்கக் கடலில், கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், நாளை (30ம் தேதி), நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, அடுத்த 48 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யக் கூடும் என்றும், 24 மணி நேரத்தில், அது கரையை நெருங்கும் போது, வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 20ம் தேதி துவங்கியது. வங்கக் கடலில் பல முறை உருவான காற்றழுத்த தாழ்வு காரணமாக, சீசனில் கிடைக்க வேண்டிய மழையை விட, தமிழகத்தில் கூடுதலாக மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளிலும், இயல்பை விட அதிக மழை கிடைத்தது.

வழக்கமாக, மார்கழி மாதத்தில் தான் பனிப்பொழிவு துவங்கும். ஆனால், இந்த ஆண்டு தட்பவெப்பநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால், முன்னதாகவே பனி பொழியத் துவங்கியது. இதன் காரணமாக, தமிழகத்தில் இரவு நேரத்தில், 19 டிகிரி செல்சியசை ஒட்டியே, வெப்பளவு இருந்தது. இதனால், அதிகமான பனிப்பொழிவு உணரப்பட்டது.
சில வாரங்கள் ஓய்வுக்குப் பின், தென்கிழக்கு வங்கக் கடலில், கடந்த 24ம் தேதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. இது மேலும் வலுப் பெற்று, கடந்த 26ம் தேதி, தென்கிழக்கு வங்கக் கடலில், சென்னையிலிருந்து தென்கிழக்கே, 456.989 கடல் மைல் தூரத்தில், புயலாக உருவெடுத்தது. இதற்கு, "தானே' என, பெயர் சூட்டப்பட்டது. இதன் காரணமாக, கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது. கடல் சீற்றத்தால், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் கிராமங்களில், தண்ணீர் புகுந்துள்ளது. கரையோரம் நிறுத்திய படகுகள், கடலில் அடித்துச் செல்லப்பட்டன; பல படகுகள் சேதமடைந்தன.

நேற்று காலை 5:30 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 322.580 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டுடிருந்த "தானே' புயல், வடக்கு மற்றும் வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்தது. நேற்று பிற்பகல் 3:00 மணி நிலவரப்படி, சென்னையிலிருந்து தென்கிழக்கே, 268.817 கடல் மைல் தூரத்தில், மையம் கொண்டுள்ளது. நாளை (30ம் தேதி) காலை நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே தானே புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு, 90 முதல் 100 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும். இதனால், கடல் சீற்றம் அதிகமாகக் காணப்படும். இதன் காரணமாக, மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். சூறைக்காற்றில், மரங்கள் வேரோடு சாயலாம்.
சென்னை, கடலூர், நாகப்பட்டினம், பாம்பன், எண்ணூர், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது; பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கடல் சீற்றம் காரணமாக, அலைகள் பல அடி உயரத்திற்கு எழும்புகின்றன. நேற்று மாலை முதல், பலத்த சூறைக்காற்றும் வீசத் துவங்கியது.
தமிழகத்தில் உள்ள மாவட்ட கலெக்டர்கள் மற்றும் பள்ளிக் கல்வி நிர்வாகத்திற்கும், புயல் எச்சரிக்கை குறித்து, அதிகாரப்பூர்வமாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலோர மாவட்டங்களில் வசிக்கும் பகுதியில் பாதிப்பு அதிகமிருக்கும் இடங்களில் வசிப்பவர்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆறுதல் : இவ்வளவு எச்சரிக்கைகளுக்கும் இடையே, புயல் தரையை நெருங்கும் போது,

Advertisement

சற்றே வலுவிழக்கும் வாய்ப்புள்ளது எனவும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பது, சற்று ஆறுதலான செய்தி.
கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் கொடியேற்றம் : வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் கரையை நோக்கி நகர்ந்து வருவதால், கடலூர் துறைமுகத்தில் 8ம் எண் எச்சரிக்கைக் கொடி ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நேற்று முன்தினம் இலங்கை அருகே காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது மேலும், தீவிரமடைந்து புயலாக மாறி கடலூருக்கும், நெல்லூருக்குமிடையே கரையை கடக்கும் என, வானிலை மையம் நேற்று அறிவித்தது. தற்போது அந்த புயலுக்கு, "தானே' என பெயரிடப்பட்டுள்ளது. "தானே' புயல் கரையை நோக்கி வேகமாக நகர்ந்து வருவதால், சென்னைக்கு தென் கிழக்கே 400 கி.மீ., தொலைவில் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், கடலூர்-நாகப்பட்டினமிடையே நாளை (30ம் தேதி) கரையைக் கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, கனமழையுடன் 60 முதல் 65 கி.மீ., வரை பலத்த சூறைக் காற்று வீசக்கூடும். இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் எச்சரிக்கைக் கொடி எண்.8 ஏற்றப்பட்டுள்ளது. மீனவர்கள் யாரும் கடலுக்குள் செல்ல வேண்டாம் என, எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (28)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
raghavan - chennai,இந்தியா
29-டிச-201117:14:05 IST Report Abuse
raghavan படைத்"தானே"....படைத்"தானே".., தானே புயலை படைத்"தானே".. ...வளர்"தானே"....வளர்"தானே".. மனதினில் கவலையை வளர்"தானே"
Rate this:
Share this comment
Cancel
Appatucker - jkt,இந்தோனேசியா
29-டிச-201116:40:01 IST Report Abuse
Appatucker insurance need to be filed.
Rate this:
Share this comment
Cancel
கோமனத்தாண்டி - கோயமுத்தூரு,இந்தியா
29-டிச-201116:32:28 IST Report Abuse
கோமனத்தாண்டி மறுபடியுமா, கிளம்பிருச்சா, அய்யோஹ்
Rate this:
Share this comment
Cancel
selvaraju singapore - singapore,சிங்கப்பூர்
29-டிச-201114:32:23 IST Report Abuse
selvaraju singapore ok
Rate this:
Share this comment
Cancel
M.KALIL RAHMAN - TICHY ,இந்தியா
29-டிச-201113:51:07 IST Report Abuse
M.KALIL RAHMAN "தானே" புயல் தானாக சென்று விடும்- . கலீல் ரஹ்மான் மு, ப்ரியா BOILARS , திருச்சி
Rate this:
Share this comment
Cancel
Noor Mohamed - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
29-டிச-201113:24:09 IST Report Abuse
Noor Mohamed ஏன் இயற்கை சீற்றுங்கள் வருகின்றது. இறைவன் என்ன சொல்லுகிறான்.. மனிதன் மேலும் மேலும் தவறு செய்யும்போது தண்டனையை இருக்குகின்றான். நாம் ஏன் அதை உணருவதில்லை. புயல் சேதம் விளைவிக்காமல் கரையை கடக்க பிரார்த்தனை செய்வோம்.
Rate this:
Share this comment
Cancel
vijayakumar chandriah - chennai,இந்தியா
29-டிச-201113:23:03 IST Report Abuse
vijayakumar chandriah அப்படியே காவால உடுங்கு , மார்ச் மாசம் குடத்த எடுத்துகுனு நடு ரோடுலே நில்லுங்க ,
Rate this:
Share this comment
Cancel
குஞ்சுமணி சென்னை - Chennai ,இந்தியா
29-டிச-201113:06:48 IST Report Abuse
குஞ்சுமணி சென்னை புயலுக்கே கூண்டு செஞ்சு மாட்டுறாங்க தமிழ்நாட்டுல, புயல் வந்து அந்த கூண்டுல சிக்கிருமாமம் , ஒரு வேள விசயகாந்த் ஐடியாவா இருக்குமோ
Rate this:
Share this comment
Cancel
priya - chennai,டோகோ
29-டிச-201111:43:36 IST Report Abuse
priya வாசு முராரி தங்கள் கருத்து ரொம்ப மதிப்பிற்குரியது
Rate this:
Share this comment
Cancel
Sn Maran - Chennai,இந்தியா
29-டிச-201111:03:54 IST Report Abuse
Sn Maran ஓடுங்கள்.... அது நம்மலை நோக்கித்தான் வருகிறது
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X