மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்

Added : டிச 29, 2011 | கருத்துகள் (30) | |
Advertisement
சென்னை : ""மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி
மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்மூடநம்பிக்கைகளை கைவிட்டு அறிவியலை நம்புங்கள் : நோபல் பரிசு விஞ்ஞானி வேண்டுகோள்

சென்னை : ""மூடநம்பிக்கைகளை கைவிட்டு, அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்ட விஷயங்களை நம்ப வேண்டும்; மூட நம்பிக்கைகளால் ஏற்படும் ஆபத்துகளில் இருந்து மனித இனத்தை அறிவியல் காத்து வருகிறது,'' என, நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் கூறினார். தொழில் அதிபரும், பாரதிய வித்யாபவன் முன்னாள் தலைவருமான, மறைந்த எஸ்.வி.நரசிம்மன் நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது.


இந்த நிகழ்ச்சியில், வேதியியல் கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெங்கட்ராமன் பேசியதாவது: இன்றைய நவீன அறிவியலுக்கு, ஐரோப்பாவில், 1600ம் நூற்றாண்டில் அமைக்கப்பட்ட ராயல் சொசைட்டி தான் அடிப்படை. முந்தைய நம்பிக்கைகளிலிருந்து மாறுபட்டு, கோபர் நிகோஸ், கலிலியோ போன்ற விஞ்ஞானிகள், சூரியன் மற்றும் கோள்களின் இயக்கத்தை கண்டுபிடித்து அறிவித்தனர். அறிவியல் பல்வேறு காலக்கட்டங்களை கடந்து, காலமாற்றத்துக்கு ஏற்ப தன்னை தானே சரி செய்து கொண்டு வளர்ந்து வந்துள்ளது. பரிசோதனைகளின் அடிப்படையில் நிரூபிக்கப்படும் நம்பிக்கைகள், சிந்தனைகளே அறிவியல். இவை, உண்மைகளின் அடிப்படையில் சொல்லப்படுபவை.


அறிவியலில் கூட ஒரு காலக்கட்டத்தில் சரி என கருதப்படும் விஷயம்; மற்றொரு காலத்தில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. பல அறிவியல் முடிவுகள், நம்பிக்கைகள் தவறானவை என, அறிவியல் பரிசோதனைகள் மூலம் மறுக்கப்பட்டுள்ளது. லிமஸ் பாலிங் என்ற விஞ்ஞானி, வைட்டமின் சி அதிக அளவு எடுத்துக் கொண்டால், உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்; புற்றுநோயை குணப்படுத்தும் என நம்பினார். ஆனால், வைட்டமின் சி புற்றுநோயை குணப்படுத்தாது என, பின்னர் நிரூபிக்கப்பட்டு விட்டது. இதுபோன்ற பல அறிவியல் முடிவுகள் பின்னாளில் தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது.


ஜோதிடம் அறிவியல் பூர்வமானது அல்ல. கோள்கள், நட்சத்திரங்கள் நமது தலைவிதியை நிர்ணயிக்க கூடியவை அல்ல. பிறக்கும்போதே நம் தலைவிதி நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது என்பதற்கு அடிப்படை ஆதாரம் ஏதும் இல்லை.
நவீன விஞ்ஞானம் மருத்துவத்துடன் கைகோர்த்ததால் தான், மனிதனின் சராசரி ஆயுள் காலம் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. மருத்துவத்திலும் அறிவியல் பூர்வமான விஷயங்களை மட்டுமே நம்ப வேண்டும். ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கப்படாதவற்றை நம்பக் கூடாது.


சுற்றியிருக்கும் உலகத்தை நம்பிக்கையின் அடிப்படையில் பார்க்காமல் அறிவியல் பூர்வமாக பார்க்க வேண்டும். பலமுறை பரிசோதிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே ஏற்றுக்கொள்ள வேண்டும். அறிவியல் பூர்வமாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துகளால் பெரியம்மை முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத நம்பிக்கையின் அடிப்படையிலான மருத்துவ முறைகளை ஏற்றுக் கொள்ள கூடாது. இவ்வாறு அவர் பேசினார். பின், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார். சிறந்த கேள்வி கேட்ட மாணவர் ஒருவருக்கு புத்தகங்களை பரிசளித்தார்.


பாரதிய வித்யா பவன் தலைவரும், மத்திய முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியுமான டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். நரசிம்மனின் மகனும், கவுர் டயானா குழும நிறுவன தலைவருமான ஸ்ரீகாந்த் நன்றி கூறினார். பவன் இயக்குனர் ராமசாமி, நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (30)

devaraya kumaravel - mysore,இந்தியா
30-டிச-201119:59:52 IST Report Abuse
devaraya kumaravel செவிடன் காதில் ஊதிய சங்கு
Rate this:
Cancel
Krishnamoorthy Ramachandran - Mumbai,இந்தியா
30-டிச-201118:05:35 IST Report Abuse
Krishnamoorthy Ramachandran இவருடைய கருத்துக்கள் சரியானவை போல தோன்றினாலும் முரண்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.நோபெல் பரிசு வாங்கியதால் அவர் சொன்னதெல்லாம் சரி என்று ஏற்றுகொள்ள முடியாது.விஞ்ஞானம் சில அடிப்படைகள் மாறுவதே இல்லை என்ற கோட்பாட்டுடன் செயல் படுகிறது .இவைகளும் மாறகுடியவையே என்பது உண்மை .இதுதான் ஆன்மிகம் .சில சரியான கரணங்கள் புரிந்துகொள்ள முடியாததால் அவைகள் மூட நம்பிக்கைகள் என்று கூறுவது சரியன்று.
Rate this:
Cancel
Sithu Rao - Moscow,ரஷ்யா
30-டிச-201116:20:21 IST Report Abuse
Sithu Rao அறிவியலும் மத நம்பிக்கையும் ஒரே குட்டையில் ஊறிய இரு மட்டைகள் தான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X