நிறைவேறவில்லை லோக்பால் மசோதா: மறுதேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைப்பு

Updated : டிச 30, 2011 | Added : டிச 30, 2011 | கருத்துகள் (25)
Share
Advertisement

புதுடில்லி: லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை. கூச்சல், குழப்பம் காரணமாக மறு தேதி குறிப்பிடாமல் சபை ஒத்திவைக்கப்பட்டது.

லோக்பால் மசோதா நேற்று ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து, அதை தற்போதைய நிலையில் நிறைவேற்ற, ஆளும் கட்சி கூட்டணியில் அங்கம் வகிக்கும் திரிணமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மசோதாவில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என, வலியுறுத்தியது. குறிப்பாக, லோக் ஆயுக்தா விவகாரத்தில், மாநில அரசுகளின் உரிமையை பாதிக்கும் வகையில் லோக்பால் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சி எம்.பி.,க்கள் குற்றம் சாட்டினர். இதுதவிர வேறு பல எதிர்க்கட்சிகளும், பெரும்பாலான மாநில கட்சிகளும் இதே கருத்தை கொண்டிருந்ததால், ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு, கடும் நெருக்கடி ஏற்பட்டது.

திரிணமுல் கூறுவது என்ன? ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில்,"மாநிலங்களில் லோக்பால் மூலமாக லோக் ஆயுக்தா அமைக்கப்படும்' என, கூறப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டதை திரிணமுல் காங்., கடுமையாக எதிர்த்தது. லோக் ஆயுக்தா செயல்பாடுகளை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் விட வேண்டும் அல்லது தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள லோக்பால் மசோதாவில் லோக் ஆயுக்தா என்ற விஷயமே இடம் பெறக்கூடாது என, வலியுறுத்தியது. மசோதாவின் மூன்றாவது தொகுப்பில், விதி எண்.63ல் இருந்து, 97 வரை லோக் ஆயுக்தா விவகாரம் இடம் பெற்றுள்ளது. ஒட்டு மொத்தமாக இந்த விதிகளை, மசோதாவில் இருந்து நீக்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தது.

பேச்சுவார்த்தை: அதனால், இந்த பிரச்னையை சுமுகமாக தீர்க்கும் வகையில், காங்கிரஸ் தரப்பில் திரிணமுல் காங்கிரசுடன், நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மம்தாவை போனில் தொடர்பு கொண்டு பேசினார். சமாஜ்வாடி, ராஷ்டிரிய லோக்தளம், பகுஜன் சமாஜ் கட்சி ஆகிய கட்சிகளின் தலைவர்களுடனும், காங்., தரப்பில் பேச்சு நடத்தப்பட்டது. மற்ற கட்சிகளின் ஆதரவை பெறுவது குறித்து, காங்கிரஸ் உயர்மட்டக் குழுவும் கூடி ஆலோசனை நடத்தியது. மொத்தத்தில், லோக்பால் மசோதாவில் 187 திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என, மம்தாவின் கட்சியும், மற்ற எதிர்க்கட்சிகளும் கோரின.

இரவு வரை தொடர்ந்த விவாதம்: இந்நிலையில், ராஜ்யசபாவில் நேற்று முற்பகலில் துவங்கிய விவாதம், நேற்று இரவு 11 மணிக்கு மேலும் தொடர்ந்தது. உறுப்பினர்களின் விவாதத்தை தொடர்ந்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சர் நாராயணசாமி, அறிக்கை சமர்ப்பித்து பேசினார். ஆனால், அவரை பேச விடாமல் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளி மற்றும் கூச்சலில் ஈடுபட்டனர். இதையடுத்து, சபையை 20 நிமிடங்களுக்கு சபைத் தலைவர் அன்சாரி ஒத்திவைத்தார். மீண்டும் சபை இரவு 11.43 மணிக்கு கூடியபோது பேசிய பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் பவன்குமார் பன்சால், "லோக்பால் மசோதா தொடர்பாக, பல்வேறு கட்சிகளும் கொண்டு வந்த திருத்தங்களைப் படித்துப் பார்க்க, அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதனால், மசோதா மீது இன்றிரவு ஓட்டெடுப்பு நடக்க வாய்ப்பு இல்லை' என்றார்.

இதன்பின் பேசிய ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜெட்லி, "மசோதா மீது ஓட்டெடுப்பு நடக்காத வகையில் அரசு விவாதத்தை நடத்துகிறது. சபையில் போதுமான ஆதரவு இல்லாததால், விவாதத்தை இழுத்தடித்தது. அரசு இந்த விவகாரத்தில் இருந்து தப்பி ஓட நினைக்கிறது. பார்லிமென்டை கண்டு பயந்து ஓடும் அரசு, ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்க உரிமையில்லை' என்றார். இதையடுத்து, கூச்சல், குழப்பத்துடன் சபையை நடத்த முடியாது என தெரிவித்த சபைத் தலைவர் அன்சாரி, நள்ளிரவு 12.02 மணிக்கு சபையை ஒத்திவைப்பதாக அறிவித்தார். இதனால், ராஜ்யசபாவில், லோக்பால் மசோதா நிறைவேற்றப்படவில்லை.

எம்.பி.,க்கள் ரகளை: ராஜ்யசபா ஒத்திவைக்கப்படுவதற்கு சில நிமிடங்களுக்கு முன், லோக்பால் மசோதா மீது விவாதம் நடந்து கொண்டிருந்த போது, லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த எம்.பி., ஒருவர், மசோதாவின் நகலை கிழித்து எறிந்தார். சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி.,க்களோ, "இந்த மசோதா பயனற்றது; அதை திரும்பப் பெற வேண்டும்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
31-டிச-201116:22:55 IST Report Abuse
muthu Rajendran The point is whether the highest investigating authority should be allowed to be used or misused by the ruling party and if so, that should be brought under the proposed lok pal. Another point that the lok ayuktha was opposed under the guise that the centre has interfering the area of states.When one is agreeing the concept of having a lok pal at the central govt level why should not we have a similar structure at the state level? why should it be seen that it amounts to interference of state.? Every party has got its own reason to oppose the lok pal bill . BJB is supporting congress's ally TMC while congress is trying to get the support of BSP. No body seems to bring a whole anti corruption Act for the entire nation . Of course the live telecast brought some light about the functioning of our representatives in Parliament. Similar arrangement should be made for our state assembly meetings also so that the people could watch the perforamance of their representatives.
Rate this:
Cancel
senapathi - cbe  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201120:10:11 IST Report Abuse
senapathi அவங்கள பிடிச்சு உள்ள வக்க அவங்களயே சட்டம் இயற்ற சொன்னால் எப்படி சொந்த செலவில் சூன்யம் வெச்சுக்க அவனுங்க என்ன நம்ள மாதி்ரி மாங்காயா என்ன
Rate this:
Thangamani - Chennai,இந்தியா
31-டிச-201112:32:00 IST Report Abuse
Thangamaniஇதுதான் உண்மை. இதிலிருந்து அவர்களே ஒப்பு கொள்கிறார்கள் "நாங்கள் திருடர்களே" என்று. மக்கள் புரட்சி மட்டுமே இதற்கு வழி.......
Rate this:
Cancel
s.hariharan - Tambaram, now at singapore camp for 5 months ,இந்தியா
30-டிச-201115:29:09 IST Report Abuse
s.hariharan Correction please: in my comment dated 30.12.11 on lokpal, please the workd "OUT" and read the 4th point as (4) It is also understood that WITHOUT the constitutional status to lokpal, instead "with" . Regret very much please.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X