பதிவு செய்த நாள் :
கருத்துகள் (30)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: வங்க கடலோரத்தில் மையம் கொண்டுள்ள "தானே' புயல் இன்று காலையில் கரையை கடந்தது. கடலூர் மற்றும் புதுச்சேரி அருகே கரையை கடந்த போது கடும் சூறாவளிக்காற்றுடன் பலத்த மழையும் பெய்தது. முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக கடலோர மாவட்ட பகுதி மக்கள் உஷார் படுத்தப்பட்டனர். புயல் தாக்கும் என்ற பகுதியில் வாழும் மக்கள் மாற்று இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த புயல் காரணமாக புதுச்சேரி மற்றும் கடலூர் பெரும் பாதிப்பை சந்தித்திருக்கும் என அஞ்சப்படுகிறது. தேச விவரம் குறித்து முழு விவரம் இன்னும் அறியப்படாமல் உள்ளது. சென்னைக்கு தென்கிழக்கே 800 கி.மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ள குறைவழுத்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வங்கக் கடலில், சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே 107.526 கடல் மைல் தூரத்தில் மையம் கொண்டிருக்கும், "தானே' புயல், படிப்படியாக நகர்ந்து, இன்று காலை, புதுச்சேரி - கடலூர் இடையே கரையைக் கடக்கிறது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் மணிக்கு 70 கி.மீ., சூறைக்காற்றுடன் இன்று பலத்த மழை பெய்யும். கரையை கடக்கும் பகுதியில், மணிக்கு, 135 கி.மீ., வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையிலிருந்து கிழக்கு மற்றும் தென்கிழக்கே,

456.989 கடல் மைல் தூரத்தில், "தானே' புயலாக உருவெடுத்தது. இதன் காரணமாக, கடந்த நான்கு நாட்களாக கடல் கொந்தளிப்பாகக் காணப்படுகிறது.புயல் காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நள்ளிரவு முதல் நேற்று மாலை வரை, சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. ஆனால், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதியில் பலத்த காற்றை தொடர்ந்து நள்ளிரவு முதல் மழை, விட்டு விட்டு பெய்யத் துவங்கியது.நெல்லூருக்கும், கடலூருக்கும் இடையே கரையை கடக்கும் என, முன்னர் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது புதுச்சேரி அருகே இன்று காலை கரையை கடக்கும் பகுதியில் மணிக்கு 135 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று இரவு முதல் புதுச்சேரி மற்றும் கடலூர், சென்னை நாகை , உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. கடலூர் மற்றும் புதுச்சேரியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை யொட்டிய பகுதிகளில் குடிசை வீடுகள் மற்றும் ஓட்டு வீடுகள் காற்றில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. புயல் தாக்கும் என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

சென்னையில் கடல் கொந்தளிப்பு மட்டும் இருந்தது. பெருத்த சேதம் ஏற்பட்டதாக இதுவரை எவ்வித தகவலும்இல்லை. மழை மட்டும் தொடர்ந்து பெய்து வருகிறது. பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விழுப்புரத்தில் ஒருவர் பலி: விழுப்பரம் மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது; கடுமையான காற்றும் வீசி வருகிறது. சங்கராபுரத்தில் மரம் விழுந்து ஒருவர் பலியானார். வானூர்- மரக்காணம் பகுதியில் பல வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இதில் சிலர் காயம் அடைந்தனர். இந்த பகுதியில் அதிகாரிகள் முகாம் இட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மரங்கள், மொபைல் கோபுரங்கள் விழுந்து, கிழக்கு கடற்கரை சாலை, விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (30)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopalan Venkatraman - Cuddalore,இந்தியா
01-ஜன-201213:24:36 IST Report Abuse
Rajagopalan Venkatraman தானே புயல் கடலூரில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் அகற்றிவிட்டது. இனியாவது ஆக்கிரமிப்புகள் வராமல் தடுத்தால் கடலூர் நகரம் இந்த புது வருடத்தில் புது பொலிவு அடையும்.
Rate this:
Share this comment
Cancel
villan - chennai,இந்தியா
31-டிச-201100:35:56 IST Report Abuse
villan இந்த புயல் நிவாரண பணம் வரும் போது மாண்புமிகுல இருந்து வட்ட செயலாளர் வண்டு முருகன் வரைக்கும் பணத்த கொள்ள அடிச்சது போக மீதம் தான் பதிக்க பாதிக்கப்பட்டவங்களுக்கு போயி சேரும்...
Rate this:
Share this comment
Cancel
renga - Madurai  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201121:05:38 IST Report Abuse
renga world is cmg to end
Rate this:
Share this comment
Cancel
Ambika. K - bangalore,இந்தியா
30-டிச-201120:01:36 IST Report Abuse
Ambika. K தானே புயல் உருவாக காரணமே இது ஒரு ஆர்ய பார்பனர்களின் சூழ்ச்சி என்று எழுத போகும் தமிழ் நிலாவையும் மரியா அல்போன்சையும் நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel
Arjun - city,இந்தியா
30-டிச-201119:53:56 IST Report Abuse
Arjun .வடசென்னை மக்கள் எப்போது இதுபோல் இடர் வந்தாலும் அல்லலுக்குளாகின்றனர்... அதிகாரிகள்,அமைச்சர்கள் எல்லோரும் ..எல்லா TV கேமரா காரன்களும்..ரிப்போர்டர்களும்..வந்தாச்சா...என்பது போல் 'POSE' கொடுத்துவிட்டு போயிடறாங்க...என்னசெஞ்சி கிழிச்சாங்க .....2001 ல் எப்படி இருந்ததோ அப்படியே இருக்கிறது...எதோ சோறு கிடைச்சா போதும் என ஏழைகளும்...மறந்து விடுகின்றனர் ..அரசியல் வாதிகளே ஜாக்கிரதை .. இதேபோல் இருந்து விடாது..வடக்கு தேய்கிறது...தெற்கு வளர்கிறது...என மக்கள் அறிய நேரமாகாது....உடனடி நடவக்கை மேற்கொள்ளுங்கள்... இல்லையேல் உங்கள் முகத்திரையை இதே பத்திரிக்கை மூலம் கிழித்தெறிவோம்...ஜனவரி முதல் தேதி வரை உனக்கு கெடு......உருப்படியான நடவடிக்கை இல்லையேல் உன் உண்மை சொரூபத்தை வெளிகொனர்வோம்...
Rate this:
Share this comment
Cancel
senapathi - cbe  ( Posted via: Dinamalar Android App )
30-டிச-201119:50:19 IST Report Abuse
senapathi நிவாரணப்பணி அது இதுன்னு சர்வ கொள்ளை தானே
Rate this:
Share this comment
Cancel
arrivu - chidambaram,இந்தியா
30-டிச-201117:37:31 IST Report Abuse
arrivu தானே மிக KOODURAMANA து தானே
Rate this:
Share this comment
Cancel
Razak Abdul - chennai,இந்தியா
30-டிச-201116:35:46 IST Report Abuse
Razak Abdul அல்லல்படும் மக்களுக்கு என் அனுதாபம்
Rate this:
Share this comment
Cancel
Dhan A - Chennai,இந்தியா
30-டிச-201115:51:02 IST Report Abuse
Dhan A புயல் வந்தால் பள்ளி மாணவனுக்கு கொண்டாட்டம்
Rate this:
Share this comment
Cancel
Dhan A - Chennai,இந்தியா
30-டிச-201115:47:23 IST Report Abuse
Dhan A தானே புயல் ஒரு முன் எச்சரிக்கை , மரம் வளர்ப்போம் தானே வராமல் தடுப்போம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X