பதிவு செய்த நாள் :
கருத்துகள் (93)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

சென்னை: சசிகலா குழுவினரின் மிரட்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், "நாங்கள் மீண்டும் உள்ளே வந்து விடுவோம். அப்போது உங்களை பழி வாங்கி விடுவோம் என, பேசுவோருக்கு மன்னிப்பே கிடையாது; அதுமட்டுமல்ல, அவர்களின் பேச்சைக் கேட்டு செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது' என கடுமையாக எச்சரிக்கை விடுத்த, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா, கோடரி கதையைக் கூறி, தொண்டர்களுக்கு விளக்கம் அளித்தார்.


சென்னையில் நேற்று நடந்த அ.தி.மு.க., பொதுக்குழு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்குப் பிறகு நடந்த முதல் கூட்டம் மட்டுமல்ல; போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா குழுவினர் வெளியேற்றப்பட்ட பிறகு நடந்த கூட்டமும் கூட. அதனால், செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் கலந்து கொண்ட ஒவ்வொரு உறுப்பினர்கள் மத்தியிலும், "ஜெயலலிதா என்ன பேசுவார்' என்றபெரும் எதிர்பார்ப்பு இருந்தது. அதை நிறைவேற்றும் வகையிலும், சசிகலா குழுவினரின் மறைமுக மிரட்டலுக்கு, பகிரங்க முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு அமைந்தது.


இது தொடர்பாக, பொதுக்குழுவின் இறுதியில் அவர் பேசியதாவது: ஒரு முறை, மரங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, ஆண்டவனிடம் மனு கொடுத்தனவாம். அதில், "இறைவா! எங்களை இரக்கமின்றி வெட்டிச் சாய்க்கும் கோடரிகளை இனி நீ தயாரிக்க அனுமதிக்காதே' என்றனவாம். உடனே ஆண்டவன் சொன்னாராம். "கோடரி தயாரிப்பதை நிறுத்தச் சொல்வதற்கு முன், நீங்கள், அந்தக் கோடரிகளுக்கு கைப்பிடி ஆவதை நிறுத்துங்கள். உங்களிடமிருந்து தானே கோடரிக்கு கைப்பிடிகள் தயாரிக்கப்படுகின்றன' என்றபோது, தலைகுனிந்து நின்றனவாம் மரங்கள். ஆக, தீதும் நன்றும் பிறர் தர வாரா. அரசியல்வாதிகளில் பலவிதம் உண்டு. சிலர் தவறு செய்கின்றனர்; குற்றம் புரிகின்றனர். அதனால், அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்சியை விட்டு நீக்கப்படுகின்றனர். அப்படி நீக்கப்படும் போது, ஒரு சிலர், "சரி! இனி நமக்கு அரசியல் வேண்டாம் என, சிலர் முடிவெடுப்பர். இன்னும் சிலர், "வேறு கட்சியில் போய் சேர்ந்து விடலாம்' என முடிவெடுப்பர். அதில் தவறேதுமில்லை. வாழ்க்கை இருக்கிற வரை வாழ்ந்தாக வேண்டும்.


இன்னும் சிலர் இருக்கின்றனர். தவறு செய்து, துரோகம் புரிந்து, கட்சியை விட்டு நீக்கப்பட்ட பின்பும், அந்தக் கட்சியைச்


Advertisement

சார்ந்தவர்களை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, "நாங்கள் மீண்டும் உள்ளே சென்று விடுவோம்; மீண்டும் செல்வாக்குடன் இருப்போம். இப்போது எங்களை பகைத்துக் கொண்டால், நாளை, நாங்கள் உள்ளே சென்ற பிறகு, உங்களை பழி வாங்கி விடுவோம். ஆகவே, எங்களை பகைத்துக் கொள்ளாதீர்கள்' என்று சொல்பவர்களும் உண்டு. அப்படி, தலைமை மீது சந்தேகம் வரும் அளவுக்கு பேசுபவர்களுக்கு மன்னிப்பே கிடையாது. அதுமட்டுமல்ல, அத்தகையவர்களுடைய பேச்சைக் கேட்டு, நம்பி, அதன்படி செயல்படும் கட்சியினருக்கும் மன்னிப்பு கிடையாது. இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (93)
kiran kanth - geniva,சுவிட்சர்லாந்து
31-டிச-201116:56:58 IST Report Abuse
kiran kanth ஜெ அவர்களின் தைரியம் உலகத்தின் மிக பெரிய தலைவராக எடுத்துகாட்டுகிறது
Rate this:
Share this comment
Cancel
muralidaran - DAR-ES-SAALAM,தான்சானியா
31-டிச-201116:07:54 IST Report Abuse
muralidaran அது சரி. அந்த இரண்டு பாதுகாப்பு அதிகாரிங்க அம்மாவுக்கு பாதுகாப்புக்கு வந்தாங்களா இல்ல அம்மாவை பாக்க வந்தாங்கள அப்படி ஏன் அம்மாவை முறைக்குறாங்க!!!!!
Rate this:
Share this comment
Cancel
Kumaran Ramdoss - Mayiladuthurai,இந்தியா
31-டிச-201115:58:27 IST Report Abuse
Kumaran Ramdoss சோ வால ரஜினி பணால், இப்ப அம்மா பணால் ஆவ போறாங்கோ, தேங்க்ஸ் mr சோ ஜாதகபடி கலைஞர் 40 mp இடங்கள் பிடிக்க போவது உறுதி. இந்த மன்னார்குடி குரூப்பால தான் AIADMK நிக்குதுன்னு தி மு க காரனுக்கு மட்டும் தெரியும் சாமி, அன்னிக்கு இலங்கை பிரச்சனையில் [ கலைஞர் வெளியே வந்திருந்தால் ] ஒரு SEAT குட A I A D M K கிடையாது பாபு, அனா உண்மையான தி மு க காரன் இப்ப தி மு க வில் இல்லை இருந்தால் D M K தோல்வி அடைந்திருக்காது ANYWAY VAICO அமைதியாக வெற்றி பெற போவது உறுதி.
Rate this:
Share this comment
Cancel
Viswanathan Ramanathan - Chennai,இந்தியா
31-டிச-201115:08:54 IST Report Abuse
Viswanathan Ramanathan சசிகலா ஆகாது ஆனா இளவரசி மட்டும் வேண்டும். சசிகலா குடும்பத்துடன் உறவு வைத்துக்கொண்டு கொஞ்சி குலாவியது யாரு ? வாய்தா ராணியா அடிமட்ட அ தி மு க தொண்டனா . இப்போ இப்படி சொல்லும் வாய்தா ராணி நாளைக்கே உடன்பிறவா சகோதரியுடன் கொஞ்சி குழவினால் அவதிபடுபவன் யார் ? முதலில் அந்தா கூட்டத்தினை உன் வீட்டை விட்டே துரத்திவிட்டு மற்ற கதையை பேசு. உன் கையெழுத்தையே உனது இல்லை என சொன்னவள் நீதானே
Rate this:
Share this comment
Cancel
veeratamilan - chennai,இந்தியா
31-டிச-201114:52:03 IST Report Abuse
veeratamilan தமிழ் நாட்டிற்கு ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Asha Bennett - kuala lumpur,மலேஷியா
31-டிச-201115:58:42 IST Report Abuse
Asha BennettANANTHAN MALAYSIA. தயவு செய்து எனக்கு சென்னை மாநகராட்சி தொடர்பு எண்கள் அல்லது மேயர் மரியாதைக்குரிய சதை துரைசாமி அவர்களின் தொடர்பு எண்கள் கிடைக்க தினமலர் உதவ வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
arunprakash - thanjai,சிங்கப்பூர்
31-டிச-201114:48:32 IST Report Abuse
arunprakash தடாலடியாக-பட்ஜெட்டில் கூட இல்லாமல்-தன்னிச்சையாக அனைத்து விலையையும் மக்கள் சுமக்க முடியாத அளவுக்கு ஏற்றி வாக்களித்த மக்களுக்கு துரோகம் இழைத்த உங்களுக்கு...............??
Rate this:
Share this comment
Cancel
ANBE VAA J.P. - madurai,இந்தியா
31-டிச-201114:16:49 IST Report Abuse
ANBE VAA J.P. சரி நீங்க ஒண்ணு சேர்ந்தீங்கான தொண்டர்களின் நிலை ? அப்படியே நீங்க உண்மைலயே பிரிஞ்சு இருந்தா,நீங்க இந்நேரம் எத்தனை வழக்குகளை அவர்கள் மேல் போட்டிருப்பீர்கள் ?, (எதிர் கட்சிகளின் மேல் உபயோகித்த வழக்குகள் ),மேலும் மேலே மனோகரன்( சென்னை ) சொன்னது போல் ஜெயா டிவி( நிர்வாகி இளவரசி ) இன்னும் ஜெயா புகழ் பாடுவதேன் ?
Rate this:
Share this comment
Cancel
Shaik Mohammed - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
31-டிச-201114:09:15 IST Report Abuse
Shaik Mohammed I dont know for how long the people of our country are going to be so blind and brainless....in front of so many people and with such a big medium this lady is going on entertaining people with false dramas and stories.....people have already seen this seperation dramas and all stuffs...when still there is a case over her in the court i find it very difficult for my knowledge to understand how these people voted for her in the past election....our state will remain cursed and will get to watch more and more cooked up stories like these till they put and end to these decades old poltitical goons and bring fresh blood in to the politics...what makes us commited to a political party so blindly that we dont even realise that we r voting for an accused with a corruption background......
Rate this:
Share this comment
Cancel
Tamilar Neethi - Chennai,இந்தியா
31-டிச-201113:05:00 IST Report Abuse
Tamilar Neethi மக்கள் மீது அக்கறை இருந்திருந்தால் "தானே" சூறை ஆடிய இந்த நேரத்தில் கட்சி கூட்டத்தை தள்ளிவைத்து விட்டு நிவாரண பணிக்கு உயர் அதிகாரிகள் கூட்டம் நடத்தி இருந்திருகாலம். குப்பை மேடு பார்க்க கேளிகாபடார் பயணம் போனது போல் ஒரு ரவுண்டு பாதிக்க பட்ட பகுதிக்கு போய் இருகாலாம். இது ஒரு பக்கம். அடுத்து பால் விலை பஸ் கட்டணம் உசர போய் நிற்கும் இந்த காலகட்டத்தில், மின்கட்டணம் கூரைய தொட காத்திருக்கும் வரும்காலத்தில்? சத்துணவு முட்டை பறிக்கப்பட்டு, முல்லை பெரியார் அணை பிரச்சினை- விவசாயிகள் ஓலம், கூடம்குளம் கொடுமை, ஸ்ரீலங்க அடவடி கடலோர ராமேஸ்வரத்தில், சமசீர் கல்வி இல் விளயாட்டு, அரசு பெருமுதலீடு இட்டு கட்டிய கட்டிடம்களை விரயபடுத்தி வீண் செய்தல், துப்பாக்கி குண்டு பட்டு வீழ்ந்த ஒரு இனம், தூங்கும் அரசு அதிகாரிகள் , சீழுடன் காணும் சட்டம் ஒழுங்க்கு , கை அரிபுடன் பலநாள் வரட்சியில் - காஞ்சமாடாய் கம்ப கொல்லை பாயும் வட்டம் மாவட்டம் பஞ்சயத் உறுபினர்கள் தலைவர்கள் , AIADMK ஆட்சியில் அடித்து கொளுத்த சசி அண்ட் கோ மேலும் அவர்களின் உதவியுடன் வாழ்ந்து வளர்ந்து கட்சிக்குள் இருக்கும் பொருளாதார பலம் உள்ளோர் , சசி சாதி , குண்டும் குழியும் உள்ள தமிழக சாலைகளில் பயானிக்கும் பாமரன் , சாரய கடயில் வருமானத்தை இழக்கும் குடிமகன் குடும்ப வெறுப்பு , அண்டை மாநில உறவில் விரிசல் கண்டு பாதிபால் தவிப்போர்- அடுத்த மாநில மக்கள், கூத்தாடும் இடம்மாறுதல் லஞ்சம், லோகாய்த் அதில் CM உட்படுத்த போராட காத்திரிக்கும் ஊழல் ஒழிப்பு இயக்கம்கள் , ஒதுங்க தயார் நிலயில் இருக்கும் தோழமை கட்சிகள், மோடி கூட்டால் அதிர்ந்து போய் இருக்கும் சிருபான்மயோர், AIADMK விற்கு பெருகி வரும் பிராமின முத்திரை, அடிகடி சொத்துகுவிப்பு வழக்கு என பெங்களூர் பயணம், எல்லாம் சேர்ந்து வரும் பாரளு மன்ற தேர்தலில் நல்ல ஒரு திருப்பதி நாமத்தையும் லட்டு தின்ன ஆசயாய் இருந்தால் பல லட்டு / லாடம்களையும் பாராளுமன்ற தேர்தல் முடிவு கொடுக்கும். இது எந்த சொசியர்களாலும் பரிகாரத்தினாலும் மாத்த முடியாது . மாத்தம்தான் வரும் . அதுசரி இந்த சசி கூட்டம் என்ன மௌனம் சாதிக்கிறது. ஒரு சிறு புகைச்சால் கூட இல்லை . இதில் எதோ ஒரு நாடகம் போல் தெரிகிறது.
Rate this:
Share this comment
Cancel
arabuthamilan - Manama,பஹ்ரைன்
31-டிச-201112:50:20 IST Report Abuse
arabuthamilan ஒரு புனித உறவு(?) புளித்து போய் விட்டது. அது தான் நீக்கம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X