பொது செய்தி

தமிழ்நாடு

"தானே' புயலால் டெல்டா பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு

Added : ஜன 01, 2012
Share
Advertisement

காட்டுமன்னார்கோவில் :"தானே' புயல் தாக்கியதில் சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் 40 ஆயிரம் ஏக்கர் நெற்பயிர் பாதிக்கப்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். மேட்டூரில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் காவிரி டெல்டா கடைமடை பகுதியான காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம் தாலுகாக்களில் 40 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் விசாயிகள் காலத்தே பயிர் செய்திருந்தனர். விவசாயிகள் அரும்பாடுபட்டு சரியான நேரத்தில் உரமிட்டு நல்ல முறையில் விளைச்சல் ஏற்படுத்தியிருந்தனர். அடுத்த சில நாட்களில் அறுவடைக்கு தயார் நிலையில் செழிப்பாக இருந்த நெல் மணிகள் தற்போது ஏற்பட்ட "தானே' புயலால் மடிந்து வீணானது.
நெல் மணிகள் பூ பிடித்து பால் கட்டும் தருவாயில் புயல் தாக்கி மடிந்ததால் நெல்மணிகள் பதராகும் நிலை ஏற்பட்டுள்ளது. நெல் மணிகள் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் அடுத்து போடப்படும் உளுந்தும் வயலுக்கு நேரடியாக போய் சேராது. இதனால் தொடர்ந்து விளைச்சல் பாதிக்கப்படும். இதனால் கடந்த ஆண்டு தர வேண்டிய நெல் காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும், மத்திய, மாநில அரசு பேரிடர் மேலாண்மை நிதியாக ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் நிபந்தனையின்றி அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்க தலைவர் வினாயகமூர்த்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X