5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர்* குழப்புகிறார் சிபு சோரன்

Added : மே 21, 2010 | கருத்துகள் (1)
Advertisement
5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர்* குழப்புகிறார் சிபு சோரன்

பொகாரோ (ஜார்க்கண்ட்):"ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து எந்த காரணத்தைக் கொண்டும் விலக மாட்டேன்; யாரும் என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது' என, ஜார்க்கண்ட் முதல்வர் சிபு சோரன் மீண்டும் ஒரு அதிரடி பல்டி அடித்துள்ளார். இதனால், ஜார்க்கண்ட் அரசியலில் குழப்பம் நீடிக்கிறது.



பார்லிமென்டில் மத்திய அரசுக்கு எதிராக பா.ஜ., சார்பில் கொண்டு வரப்பட்ட வெட்டுத் தீர்மானத்தை எதிர்த்து சிபு சோரன் ஓட்டளித்தார். இதனால், ஜார்க்கண்டில் அவரது ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற பா.ஜ., முடிவு செய்தது.இதையடுத்து, முதல்வர் பதவியை பா.ஜ.,வுக்கு விட்டுத் தருவதாக சிபு சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில நாட்களிலேயே இந்த முடிவை சிபு சோரன் மாற்றிக் கொண்டார். "மீதமுள்ள பதவிக் காலத்தை இரு கட்சிகளும் பகிர்ந்து கொள்ளலாம்' என, சிபு சோரன் கூறினார். இதன்படி, முதல் 28 மாதங்கள் பா.ஜ.,வும், அடுத்த 28 மாதங்கள் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் முதல்வர் பதவியை வைத்துக் கொள்ளலாம் என்று கூறினார். இதை பா.ஜ.,வும் ஏற்றுக்கொண்டது. பா.ஜ.,வின் அர்ஜுன் முண்டா முதல்வராக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நேற்று பொகாரோவில் நடந்தது. இந்த கூட்டத்தில் சிபு சோரன் பேசுகையில், "ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் ஐந்தாண்டு நீடிப்பேன். ஐந்தாண்டுகள் பதவி வகிப்பதற்காகவே, எங்கள் கட்சியை தேர்தலில் மக்கள் தேர்வு செய்தனர். எனவே, முதல்வர் பதவியில் இருந்து எந்த காரணத்தைக் கொண்டும் விலக மாட்டேன்; யாரும் என்னை முதல்வர் பதவியில் இருந்து நீக்க முடியாது' என்றார்.



சிபு சோரனின் இந்த அதிரடி பல்டி காரணமாக, ஜார்க்கண்ட் அரசியலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிபு சோரனின் இந்த போக்கு, பா.ஜ., மேலிடத்துக்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள், சிபு சோரன் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுவது என்ற முடிவுக்கு வந்து விட்டனர்.இம்மாதம் 25ம் தேதி பா.ஜ., பார்லிமென்ட் குழு கூட்டம் நடக்கவுள்ளது. இதில், ஜார்க்கண்ட் விவகாரம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும் என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ., மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், "குழப்பமான அரசியல் காரணமாக, ஜார்க்கண்ட் மாநிலம் நகைப்புக்கிடமான கூடாரமாக மாறிவிட்டது. இதற்கு மேல் இதுகுறித்து எதுவும் கூற விரும்பவில்லை' என்றார்.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முருகன் - chennai,இந்தியா
22-மே-201014:37:07 IST Report Abuse
 முருகன் பிஜேபி சிபு சொரனோடு கூட்டணி வைக்க கூடாது.
Rate this:
Share this comment
Cancel
shyamalasivaraman - Tuticorin,இந்தியா
22-மே-201005:48:03 IST Report Abuse
 shyamalasivaraman Sibu Soren is the worst politician. Why BJP allliance with him.Very ashame.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X