பதிவு செய்த நாள் :
கருத்துகள் (4)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

மதுரை: வழக்குப்பதிவு செய்யாமல் இழுத்தடிக்கும் போலீசார் குறித்து, எஸ்.எம்.எஸ்.,சில், எஸ்.பி., அலுவலகத்தில் புகார் செய்யும் முறை, தமிழகத்தில் முதன்முறையாக ஜன.,15ல் மதுரையில் அறிமுகமாகிறது.
குடிபோதையில் வாகனம் ஓட்டுவது உட்பட 20 விதிமீறல்களை தடுக்க, "வெய்கிள் டிராகிங் சிஸ்டம்' வசதி, கடந்த நவ., 8ல், தென் மாவட்டங்களில் முதன்முறையாக மதுரை மாவட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கான சாப்ட்வேரில், தமிழகம் முழுவதுமுள்ள 1.50 கோடி வாகனங்களின் பதிவெண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவெண்ணை குறிப்பிட்ட எண்ணுக்கு எஸ்.எம். எஸ்., மூலம் போலீஸ்

அனுப்பினால் போதும். மூன்று வினாடிகளில் வாகனத்தின் முழு விபரத்தையும் எஸ்.எம்.எஸ்.,சில் அறிய முடியும். "இவ்வசதியால் இதுவரை 19 திருட்டு வாகனங்கள் கண்டறியப்பட்டுள்ளது,'' என்கிறார், இந்த சாப்ட்வேரை உருவாக்கிய, மதுரை எஸ்.எஸ். காலனி "ஆக்மி சாப்ட்வேர் டெக்னாலஜி' இயக்குனர் எஸ்.கே. மாரியப்பன்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது : குடிபோதையில் வாகனம் ஓட்டி மாட்டும்போது, அதுகுறித்த விபரமும் பதியப்படும். மீண்டும் அதே நபர் சிக்கும்போது,போலீசார் எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், எத்தனை முறை விதிமீறல் செய்துள்ளார் என்ற விபரம் உடனுக்குடன் தெரிவிக்கும் வசதி உள்ளது. பதிவெண்ணை திருடர்கள் மாற்றினாலும், இன்ஜின் நம்பர், சேசிஸ் நம்பரை கொண்டு வண்டியின் முழுவிபரத்தையும் அறிய முடியும். இரு ஆண்டுகளுக்கு முன், எஸ்.எம்.எஸ்.,சில்(97881 11000) புகார் செய்யும் முறை, மதுரையில் அறிமுகமானது. சில காரணங்களால் அது நிறுத்தப்பட்டு விட்டது. தற்போது, மீண்டும்

Advertisement

இத்திட்டத்தை செயல்படுத்த ஆஸ்ரா கர்க் எஸ்.பி., கூறியுள்ளார். புகார் குறித்து பொதுமக்கள்எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், அதை ஏற்றுக் கொண்டதற்கான மனு எண் புகார்தாரருக்கு உடனடியாகஅனுப்பப்படும். அந்த புகார் சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும். அவர் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரித்து நடவடிக்கை எடுப்பார். அதுகுறித்து எஸ்.எம்.எஸ்., மூலம் எஸ்.பி., அலுவலகத்திற்கு தகவல் அனுப்புவார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்யாதது குறித்தும் எஸ்.பி., அலுவலகத்திற்கு பொதுமக்கள் எஸ்.எம்.எஸ்., அனுப்பலாம். ஜன.,15ல் இவ்வசதியை அறிமுகப்படுத்த, போலீசார் திட்டமிட்டுள்ளனர், என்றார்.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganesan - chennai,இந்தியா
07-ஜன-201206:48:54 IST Report Abuse
ganesan சுப்பர். we expet splede all area
Rate this:
Share this comment
Cancel
- Alkhor,கத்தார்
06-ஜன-201213:28:15 IST Report Abuse
 Well Done SP. Really very good initiative..Keep it up.
Rate this:
Share this comment
Cancel
Arun Kumar Thilipan - Sivagangai,இந்தியா
06-ஜன-201212:21:22 IST Report Abuse
Arun Kumar Thilipan நல்லா தான் இருக்கு...
Rate this:
Share this comment
Cancel
CUMBUM P.T.MURUGAN - TRICHY,இந்தியா
06-ஜன-201207:50:18 IST Report Abuse
CUMBUM P.T.MURUGAN தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தி, நாட்டுக்கு நல்லது செய்ய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X