ஸ்ரீநகரில் ஊரடங்கு நேற்று தளர்வு : ஆனாலும் மாமூல் வாழ்க்கை பாதிப்பு

Added : ஜூலை 12, 2010
Advertisement

ஸ்ரீநகர் : ஸ்ரீநகரில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதும், பிரிவினைவாத அமைப்பினர் நடத்திய போராட்டம் காரணமாக அங்கு இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.


காஷ்மீரில் கடந்த 25 நாட்களுக்கும் மேலாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே நடந்த மோதல் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது. போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 15க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். இதனால், போராட்டம் கலவரமாக மாறியது. ஸ்ரீநகர், அனந்தநாக் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக ஸ்ரீநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், இயல்பு நிலை திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஹூரியத் மாநாடு அமைப்பில் இருந்து பிரிந்து சென்ற பிரிவினைவாத அமைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.


இதனால், ஸ்ரீநகரின் பெரும்பாலான பகுதிகள், குறிப்பாக புறநகர் பகுதிகள் நேற்று வெறிச்சோடி கிடந்தன; வாகனங்கள் இயங்கவில்லை; கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தன. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டபோதும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை. இதற்கிடையே, கலவரம் தொடர்பாக செய்திகள் வெளியிடுவதற்கு மீடியாக்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதை எதிர்த்து போராட்டம் நடத்தப்பட்டது. காஷ்மீரில் கடந்த நான்கு நாட்களாக எந்த பத்திரிகையும் வெளியாகவில்லை. இந்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து, வழக்கம் போல் பத்திரிகைகள் நேற்று வெளியாயின.


Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X