சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சில்மிஷ தலைமை ஆசிரியர் கைது : கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்

Added : ஜூலை 12, 2010 | கருத்துகள் (6)
Advertisement
சில்மிஷம்,தலைமை ஆசிரியர், கைது,பொதுமக்கள், சாலை மறியல்

காரிமங்கலம் : தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியம் மல்லுப்பட்டி அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர், மாணவியிடம் சில்மிஷம் செய்த பிரச்னை தொடர்பாக கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து மாணவர்கள், பொது மக்கள் சார்பில், மூன்று இடங்களில் சாலை மறியல் நடந்தது. இதில், இரு இடங்களில் மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.


தர்மபுரி அருகே உள்ள மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பன்னீர்செல்வம் பணிபுரிகிறார். இவர், கடந்த 9ம் தேதி பள்ளிக்கு வரும் போது, அதே பள்ளியில் படிக்கும் மாணவியை பைக்கில் அழைத்து வந்தார். அப்போது, மாணவியிடம் தலைமையாசிரியர் பன்னீர்செல்வம் சில்மிஷம் செய்ததாக மாணவியின் பெற்றோர், போலீசில் புகார் செய்தனர். மகேந்திரமங்கலம் போலீசார், தலைமையாசிரியரை விசாரணைக்காக அழைத்துச் செல்ல பள்ளிக்கு வந்தனர். அப்போது, போலீசாருடன் சென்ற மாணவியின் குடும்பத்தினர் பள்ளி வளாகத்தில் போலீசார் முன் பன்னீர்செல்வத்தை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. சில்மிஷ புகார் தொடர்பாக பன்னீர்செல்வத்தை போலீசார் கைது செய்தனர்.


"பள்ளி வளாகத்தில் நுழைந்து தலைமையாசிரியரை தாக்கியதை தடுத்து நிறுத்தாமல் வேடிக்கை பார்த்த மகேந்திரமங்கலம் எஸ்.ஐ., நாகராஜ், போலீசார் சுந்தரராஜன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி தலைமை ஆசிரியரை விடுதலை செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் ஆகியோர் மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை 9 மணிக்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியல் குறித்து தகவல் அறிந்த ஜக்கசமுத்திரம், ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதிகளிலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் தலைமையாசிரியருக்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் சாலைமறியலில் ஈடுபட்டதால், பாலக்கோடு - பெங்களூரு சாலையில் நேற்று காலையில் இருந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பொதுமக்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், மறியலில் ஈடுபட்டவர்கள், "தலைமை ஆசிரியரை தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும்' என, கூறி மறியலை தொடர்ந்தனர். தலைமை ஆசிரியரை தாக்கியவர்கள் மீது வழக்கு பதிவு செய்ததாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்த பொதுமக்கள், தாக்கியவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றனர். பல மணிநேரம் பேச்சுவார்த்தை நடந்த நிலையில் ஜக்கசமுத்திரம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது.


மல்லுப்பட்டி, ஜிட்டாண்டஅள்ளி ஆகிய பகுதியில் மதியம் 3.30 மணிக்கு மேலும் மறியல் தொடர்ந்தது. மறியலில் போது சிலர் பாதுகாப்புக்கு நிறுத்தியிருந்த போலீசார் மீது கல்வீசினர். போலீசார் வழியில்லாமல் மறியலில் ஈடுபட்டவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். மாலை 4 மணிக்கு ஜிட்டாண்டஅள்ளி பஸ் ஸ்டாண்டில் சாலைமறியல் செய்தவர்கள் மீதும் போலீசார் தடியடி நடத்தி விரட்டி அடித்தனர். இதில், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர் காயம் அடைந்தனர். இரு இடங்களில் நடந்த தடியடியால் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.


ஜாதி பிரச்னையாக உருவெடுக்கும் நிலை: மாணவியை சில்மிஷம் செய்த தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட பிரச்னை, இரு சமூகத்தினருக்கான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. பாதிக்கப்பட்டதாக சொல்லப்படும் மாணவிக்கு ஆதரவாக தலித் அமைப்புகளும், சில அரசியல் கட்சியினரும், தலைமையாசிரியருக்கு ஆதரவாக ஆளுங்கட்சியினரும் களத்தில் குதித்ததால், இப்பிரச்னை நேற்று பெரிய அளவில் உருவெடுத்தது. அரசியல் கட்சியினர் தலையீடு காரணமாக மறியல் நடந்த இடங்களில் போலீசார் நடத்திய பேச்சு வார்த்தை பலன் அளிக்காமல் போனது. இறுதியில் தடியடி நடத்திய பின்னரே மறியல் வைவிடப்பட்டது. இப்பிரச்னை ஜாதிய பிரச்னையாக உருவெடுத்திருப்பதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
amkarunanithi - rayakkottai,இந்தியா
13-ஜூலை-201015:06:24 IST Report Abuse
amkarunanithi தனிப்பட்ட ஒரு சிலர் செய்யும் வீண் பிரச்சனைகளால் நல்ல முறையில் பனிசெய்பவர்களுக்கும் ஒருவித வெறுப்பு ஏற்ப்பட்டு விடுவது தவிர்கமுடியாதது.
Rate this:
Share this comment
Cancel
சங்கர் - coimbatore,இந்தியா
13-ஜூலை-201012:01:09 IST Report Abuse
சங்கர் இந்த மாதிரி சில்மிஷம் செய்கின்ற ஆசிரியர்களை கைது செய்தது சரியான ஒன்று... அதற்கு பொது மக்களே ஆதரவு தராமல் மறியல் செய்தது மடத்தனம்... பொதுமக்களுக்கு அறிவே கிடையாது... அவங்க வீட்டு பொண்ண சில்மிஷம் பண்ணா சும்மா இருப்பங்களா... இந்த மாதிரி பொது மக்கள் லூசு மாதிரி இருக்கரனலத்தான் சில்மிஷம் செய்கின்ற ஆசிரியர்கள் எல்லாம் ஜாலியா சுத்தறாங்க...
Rate this:
Share this comment
Cancel
S.H.ரபியுதீன் - துபாய்,ஐக்கியஅரபுநாடுகள்,இந்தியா
13-ஜூலை-201011:47:47 IST Report Abuse
S.H.ரபியுதீன் இதில் அந்த தலைமை ஆசிரியரின் செய்த குற்றத்தை பார்க்காமல் ஜாதி வெறிகொண்டு அவனுக்காக ஆதரவு கொடுக்கும் மக்களும் ஒரு விதத்தில் குற்றவாளிகளே. எப்பொழுதுதான் திருந்தும் இந்த இந்திய நாடு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X