சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பசுபதிபாண்டியன் திண்டுக்கல்லில் வெட்டிக் கொலை: வீட்டுக்கு வெளியே பழிதீர்த்த கும்பல்

Updated : ஜன 10, 2012 | Added : ஜன 10, 2012 | கருத்துகள் (13)
Advertisement
பசுபதிபாண்டியன் திண்டுக்கல்லில் வெட்டிக் கொலை: வீட்டுக்கு வெளியே பழிதீர்த்த கும்பல்

திண்டுக்கல்:தேவேந்திர வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதிபாண்டியன், 51, திண்டுக்கல்லில் நேற்று, வெட்டிக் கொல்லப்பட்டார். வீட்டுக்கு வெளியே நின்றிருந்த போது, காரில் வந்த கும்பல் கொலை செய்து தப்பியது.தூத்துக்குடி அருகே அலங்காரதட்டை சேர்ந்த பசுபதிபாண்டியனுக்கும், மறைந்த வெங்கடேஷ் பண்ணையாருக்கும் விரோதம் இருந்தது. இருதரப்பிலும் தொடர்ந்து கொலைகள் நடந்தன. இதனால், பசுபதிபாண்டியன், 10 ஆண்டுகளுக்கு முன், திண்டுக்கல் நந்தவனப்பட்டியில் குடும்பத்துடன் குடியேறினார்.

கடந்த 2006 ல், இவர் தூத்துக்குடியில் இருந்து காரில் வரும் போது, எப்போதும் வென்றான் பாலம் அருகே, ஒரு கும்பல் குண்டு வீசி தாக்கியது. இதில், இவரது மனைவி ஜெஸிந்தா பாண்டியன் வெட்டி கொல்லப்பட்டார். இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், பசுபதிபாண்டியன் நேற்று முன்தினம், முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, தனது இயக்கம் சார்பில் தேனியில் ஆர்ப்பாட்டம் செய்தார். நேற்று இரவு 8.30 மணிக்கு, வீட்டுக்கு முன் நின்றிருந்தார். காரில் வந்த ஏழு பேர் கும்பல், அரிவாளால் வெட்டிக் கொன்று தப்பியது.
இவருடன் வீட்டில் இருந்து தாய் வேலம்மாள், மகள் சந்தனப்பிரியா, 14, மகன் சந்தோஷ்,12, ஆகியோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இவரது பாதுகாப்புக்காக இருந்த 10 க்கும் மேற்பட்டவர்களும், ஓட்டலுக்கு சாப்பிட சென்று விட்டனர். இதை நோட்டமிட்ட கும்பல் பழி தீர்த்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்யக் கோரி இவரது ஆதரவாளர்கள், திண்டுக்கல்- திருச்சி ரோட்டில் மறியல் செய்தனர்.
இதுகுறித்து ஜெயச்சந்திரன் எஸ்.பி., கூறுகையில், ""தப்பிய கும்பலை பிடிக்க போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது,'' என்றார்.

கொலைகளின் உச்சகட்டம்பழிதீர்த்தது பழைய பகையா?இருதரப்பினருக்கு இடையே நடந்த தொடர் கொலைகளின் உச்சகட்டமாக, பசுபதி பாண்டியனும் கொல்லப்பட்டார்.
தலித் இயக்க தலைவராக தன்னை முன்னிறுத்தி கொண்ட பசுபதி பாண்டியனுக்கும், மறைந்த வெங்கடேஷ் பண்ணையாருக்கும் விரோதம் இருந்தது. இந்நிலையில், வெங்கடேஷ் பண்ணையார் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு பிறகும் இருதரப்புக்கும் மோதல் போக்கு குறையவில்லை.

பாதுகாப்புக்காக குடும்பத்துடன் திண்டுக்கல் வந்த பசுபதிபாண்டியன், வழக்குகளுக்காக தூத்துக்குடிக்கு அடிக்கடி சென்றுவந்தார். கடந்த 2006 ஏப்., 6 ல், தூத்துக்குடியில் இருந்து காரில் வந்த பசுபதிபாண்டியன் மீது குண்டு வீசி தாக்கினர். சரமாரியாக வெட்டியதில், மனைவி ஜெஸிந்தா பாண்டியன் கொல்லப்பட்டார். வக்கீலாக இருந்த ஜெஸிந்தா, கணவரின் வழக்குகளில் ஆஜராகி வந்தார். சொந்த ஊரை விட்டு திண்டுக்கல்லில் தஞ்சம் புகுந்த பசுபதி பாண்டியனை, பல ஆண்டுகளாக கண்காணித்து பழிதீர்த்துள்ளதாக, அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

தூத்துக்குடியில் போலீசார் உஷார்: பசுபதி பாண்டியன் கொலையைத் தொடர்ந்து, தூத்துக்குடி அருகே அவரது சொந்த கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டன. தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத்தலைவரான பசுபதி பாண்டியன், நேற்றிரவு திண்டுக்கல்லில் கொலை செய்யப்பட்டார். இத்தகவல் வெளியானதும் அவரது சொந்த கிராமமான, தூத்துக்குடி அருகேயுள்ள கீழ அலங்காரத்தட்டில் பாதுகாப்பிற்காக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் போலீசார் ரோந்து சென்றுவருகின்றனர்.

பசுபதி பாண்டியன் மனைவி ஜெஸிந்தா பாண்டியன் நினைவிடம் கீழஅலங்காரத்தட்டில் இவரது வீட்டின் அருகே உள்ளது. ஆண்டுதோறும் அங்கு நடக்கும் நினைவு நிகழ்ச்சியில் பசுபதி பாண்டியன் பங்கேற்பார். சமீபத்தில் நடந்த சட்டசபைதேர்தலில் நெல்லை தொகுதியில் இவரது கூட்டமைப்பு சார்பில் பசுபதி பாண்டியன் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இவருக்கு ஒருமகன், ஒருமகள் உள்ளனர்.

உறவினர்கள் திண்டுக்கல் விரைந்தனர்: இவரது படுகொலை குறித்து கேள்விப்பட்டதும் உறவினர்கள், தூத்துக்குடியிலிருந்து திண்டுக்கல் புறப்பட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karur Riaz - Karur,இந்தியா
11-ஜன-201223:17:07 IST Report Abuse
Karur Riaz கூலி படை குற்றவாளிகளை சட்டத்தின் மூலம் மரண தண்டனை உடனே கிடைக்க வேண்டும்....
Rate this:
Share this comment
Cancel
Sudhakar - Chennai,இந்தியா
11-ஜன-201213:09:30 IST Report Abuse
Sudhakar இதற்கு ஆதரவான எதிர் கோஷ்டியினரை கைது செய்து சிறையில் அடையுங்கள். வன்முறை நடப்பதை தடுத்து நிறுத்துங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Rajan Mani - Trichy,இந்தியா
11-ஜன-201212:17:24 IST Report Abuse
Rajan Mani இந்த பலி வாங்கும் படலம் எப்போது தான் முடிவுக்கு வரும், மனிதனே உனக்கு தீங்கு செய்பவர்களுக்கு உன்னால் முடிந்தவரை நன்மை செய், ஆனால் ஒரு போதும் தீங்கு செய்ய நினைக்காதே. பாவம் அந்த பிஞ்சு குழந்தைகளின் நிலைமை, இந்த நிலை உனக்கு வந்தால்?. உன் குடும்பத்தாருக்கு வந்தால்?. இப்படிக்கு உண்மையுள்ள ஒரு தமிழன், ஒரு இந்தியன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X