விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தை துவக்கினார் முதல்வர்

Added : ஜன 13, 2012 | கருத்துகள் (8) | |
Advertisement
சென்னை:இந்த ஆண்டுக்கு, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், ஏழைகள் பயன் பெறுவது மட்டுமன்றி, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு
விலையில்லா வேட்டி, சேலை திட்டத்தை துவக்கினார் முதல்வர்

சென்னை:இந்த ஆண்டுக்கு, விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, பயனாளிகளுக்கு வழங்கி, முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.பொங்கல் பண்டிகையை ஒட்டி, ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தின் மூலம், ஏழைகள் பயன் பெறுவது மட்டுமன்றி, கைத்தறி, விசைத்தறி தொழில்களில் ஈடுபட்டுள்ளோருக்கும், ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு கிடைக்கிறது.


இந்த ஆண்டு, பொங்கல் பண்டிகையை ஒட்டி, விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டத்தின் கீழ், ஒரு கோடியே, 70 லட்சத்து, 84 ஆயிரம் சேலைகளும், ஒரு கோடியே, 69 லட்சத்து, 75 ஆயிரம் வேட்டிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட உள்ளன. இத் திட்டத்துக் கென முதல்வர் ஜெயலலிதா, 350 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.இந்த ஆண்டுக்கான விலையில்லா வேட்டி, சேலைகள் வழங்கும் திட்டத்தை, தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். ஏழு பயனாளிகளுக்கு, வேட்டி, சேலைகளை வழங்கினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சிந்திப்பவன் - chennai,இந்தியா
14-ஜன-201214:25:08 IST Report Abuse
சிந்திப்பவன் "வேலையில்லா மக்களுக்கு விலையில்லா வேட்டி சேலை" என்றோ,"வெட்டிகளுக்கு வேட்டிகள்" என்றோ சொல்லலாம்
Rate this:
Cancel
tamilaa thamila - chennai,இந்தியா
14-ஜன-201213:24:28 IST Report Abuse
tamilaa thamila இரு கழகங்கள் இருக்கும் வரை தமிழனில் அரை வாசிப்பேர் பண்டிகையை கூட தன் சொந்த உழைப்பில் புது துணி வாங்க முடியாத கை என்துபவராக தான் இருப்பார்.
Rate this:
Cancel
manoharan - chennai,இந்தியா
14-ஜன-201212:36:58 IST Report Abuse
manoharan எல்லாம் சரி. ஆனால் அவர்கள் சொந்த பணத்தில் கொடுத்தது போல் தங்கள் படங்களை அந்த இலவசங்கள் மீது போட்டு கொள்வது நாகரீகமற்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X