சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபருக்கு போலீஸ் வலை

Added : ஜூலை 13, 2010 | கருத்துகள் (2)
Share
Advertisement

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே சிறுமியை பலாத் காரம் செய்த வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். திருக்கோவிலூரை அடுத்த எடுத்தனூர் காலனியைச் சேர்ந்தவர் ஆதிமூலம். இவரது மகள் நிவேதா(15), (பெயர் மாற்றப் பட்டுள்ளது). பத்தாம் வகுப்பு முடித்து விட்டு வீட்டில் உள்ளார். கடந்த 6ம் தேதி காலை 9 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற நிவேதாவை அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் திருநாவுக்கரசு (20) திடீரென தாக்கினார். தடுமாறி விழுந்த அவரது கைகளை திருநாவுக்கரசு பின்புறமாக கட்டி வாயில் துணியை வைத்து அடைந்து அருகில் ள்ள கரும்பு தோட்டத்திற்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.


இதனை வெளியில் கூறினால் கொலைசெய்து விடுவதாக மிரட்டிவிட்டுச் சென்றார்.நிவேதா நடந்த சம்பவம் பற்றி பெற்றோர்களிடம் கூறி அழுதார். இது குறித்து நியாயம் கேட்க சென்ற போது நிவேதா குடும்பத்தினரை திருநாவுக்கரசு, அவரது தந்தை பெரியசாமி (42), தாய் காந்தி (39) ஆகியோர் திட்டி தாக்கியதுடன், கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின்பேரில் திருக்கோவிலூர் இன்ஸ் பெக்டர் இளங்கோவன், சப்-இன்ஸ்பெக்டர் காமராஜ் ஆகியோர் வழக்குப் பதிந்து பெரியசாமி அவரது மனைவி காந்தி இருவரையும் கைது செய்தனர். தலைமறைவான திருநாவுக்கரசை தேடி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ச.வடிவேல் முருகன் - mumbai,இந்தியா
13-ஜூலை-201017:42:56 IST Report Abuse
ச.வடிவேல் முருகன் இவனை போல மனம்(மாணம்)கேட்டவனுக்கு மரியாதையை கொடுத்து பேசவேண்டாம் ஆசிரியரே....
Rate this:
Cancel
j sankaran - westkknagarchennai,இந்தியா
13-ஜூலை-201005:53:09 IST Report Abuse
j sankaran The Police has to investigate the matter and suitable action to be taken against the culprits. There should be no political interference.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X