இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் காலமானார் | Grand old dame of photo journalism no more | Dinamalar

பொது செய்தி

இந்தியா

இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் காலமானார்

Updated : ஜன 16, 2012 | Added : ஜன 16, 2012
Share
வதோதரா: இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் 98 வயதில் காலமானார்.சுதந்திர இந்தியாவின் போது ஆங்கிலேயர்கள் மற்றும் நேரு உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் பேச்சுக்கள் ,பொதுக்கூட்டங்களை தனது கேமிராவில் கிளிக் செய்து இந்திய பத்திரிகை உலகில் சிறந்து விளங்கினார் இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட நிருபர் ஹோமி வெய்யார‌வெல்லா,98. (1913-2012).குஜராத் மாநிலம் வதோதரா

வதோதரா: இந்தியாவின் முதல் பெண் புகைப்பட நிருபர் 98 வயதில் காலமானார்.சுதந்திர இந்தியாவின் போது ஆங்கிலேயர்கள் மற்றும் நேரு உள்ளிட்ட தலைவர்களின் அரசியல் பேச்சுக்கள் ,பொதுக்கூட்டங்களை தனது கேமிராவில் கிளிக் செய்து இந்திய பத்திரிகை உலகில் சிறந்து விளங்கினார் இந்தியாவின் முதல் பெண் பத்திரிகை புகைப்பட நிருபர் ஹோமி வெய்யார‌வெல்லா,98. (1913-2012).குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டத்தின் நவசாரி கிராமத்தைச் சேர்ந்த இவர். நேற்று தனது வீட்டு கட்டிலிருந்து கீழே விழுந்ததில், இடுப்பு எலும்பு முறி்ந்தது. சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
கடந்த 1942-ம் ஆண்டு டில்லியில், பிரிட்டீஸ் தகவல் தொடர்பு (பி.ஐ.எஸ்)சேவையில் புகைப்பட நிருபராக பணியாற்றினார். நாடு சுதந்திரம் அடையும் முன்பே, அப்போதைய ஆங்கிலேயர்கள், மற்றும் இந்திய தலைவர்களின் பேச்சுக்கள்,பொதுக்கூட்டங்களில் , புகைப்பட நிருபராக பணியாற்றியுள்ளார்.
நாடு சுதந்திரம் அடைந்து 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி முதல் தேசிய ‌கொடி ஏற்றப்பட்டதை புகைப்படம் எடுத்த பெருமைக்குரியவர். அதே நேரத்தில் இந்தியாவின் கடைசி வைசிராய், லார்ட் மவுன்ட்பேட்டன் பிரபு, ஜவஹர்லால் நேரு சந்திப்பினை புகைப்படம் எடுத்த பெருமை இவரை சாரும்.தனது 13 வயதில் கேமிரா பயன்படுத்த துவஙகி, 40 ஆண்டுகள் இந்திய பத்திரிகை உலகின் சிறந்த புகைப்பட நிருபராக பணியாற்றி கடந்த 1970-ம் ஆண்டு ஓய்வு பெற்றார். கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இவருக்கு பத்மவிபூசன் விருது வழங்கப்பட்டது.சமீபத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி சாத்பவானா உண்ணாவிரதம் இருந்த போது, ஹோமி வெய்யார‌வெல்லாவை பற்றி குறிப்பிடுகை‌யில், இந்திய பத்திரிகை உலக வரலாற்றின் கண்களில் இவரது புகழ் மறைக்கப்பட்டுள்ளது.இது வருத்தத்திற்குரியது என கூறினார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X