சென்னை எழிலகத்தில் தீ: வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்; சதியா ?

Updated : ஜன 16, 2012 | Added : ஜன 16, 2012 | கருத்துகள் (26) | |
Advertisement
சென்னை: சேப்பாக்கில் உள்ள அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த தீயில் சதிச்செயல் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது. பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு
வணிகவரி- சமூகநலத்துறை ஆவணங்கள் சாம்பல்

சென்னை: சேப்பாக்கில் உள்ள அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த தீயில் சதிச்செயல் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.


பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவில் தங்கியிருந்து பணியாற்றும் ஊழியர்கள் கூட யாரும் இல்லை. இந்நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து நடந்திருக்கிறது.தீ பிடித்த இந்த கட்டடத்தில் காவலர்கள் யாரும் இருந்தனரா, இல்லையா என்றும் தீ பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


சென்னை சேப்பாக்கில் உள்ள எழிலகம் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்த அளவிற்கு பழங்கால கட்டடம். இங்கு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழில் வணிக வரி அலுவலகத்தில் இருந்து திடீர் தீ கிளம்பியிருக்கிறது. பின்னர் அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தீ பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படு வேகமாகவும், கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டடத்திற்குள் நுழைந்து தீயை அணøக்கும் பணியில் இருந்த மூத்த தீயைணப்பு வீரர் அன்பழகன் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார். மத்திய கோட்ட அலுவலர் பிரியா , தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மற்றும் பிரபாகர் ஆகியோர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (26)

thirunavookkarasu - Chennai,இந்தியா
18-ஜன-201216:20:35 IST Report Abuse
thirunavookkarasu இது சதி வேலை தான். இப்படி அரசு ஆவணங்கள் சாம்பலாகும்போது, எப்படி எறிந்த ஆவணங்களை கைப்பட்ட்ருவது. "தகவல் பாதுகாப்பு" ஆங்கிலத்தில் "data பாக்குப்" என்று சொல்லுவமே, அதை ஏன் அரசு கடைபிடிக்கவில்லை?
Rate this:
Cancel
Raji Senthilkumar - Tagore Drive,சிங்கப்பூர்
17-ஜன-201207:13:33 IST Report Abuse
Raji Senthilkumar கட்சிகாரர்கள் செய்த சதி செயல் ,
Rate this:
Cancel
Nagarajan Pichu Iyer - Chennai,இந்தியா
16-ஜன-201220:55:55 IST Report Abuse
Nagarajan Pichu Iyer எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்து சதித்திட்டம் காரணமாக ஏற்பட்டுஇருக்க வாய்ப்புகள் அதிகம் காணப்படுகின்றன எனவே இதுகுறித்து விரிவான விசாரணை நடத்துவது அவசியம் இந்த சம்பவத்தில் உயிர் இழந்த அன்பழகன் குடும்பத்தினருக்கு ஆறுதல் மட்டும் தெரிவிக்காமல் கணிசமான பொருள் உதவியும் அவரது வாரிசுக்கு அரசு வேலையும் உடனடியாக வழங்குவது மிகவும் அவசியம் நாகராஜன் சென்னை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X