சென்னை: சேப்பாக்கில் உள்ள அரசு அலுவலகம் இயங்கும் எழிலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயணைப்பு வீரர் ஒருவர் பலியானார். இந்த அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இங்கு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் இதுவரை எதுவும் அறியப்படவில்லை. இருப்பினும் இந்த தீயில் சதிச்செயல் இருக்குமோ என்று சந்தேகிக்கப்படுகிறது.
பொங்கல் திருநாளை முன்னிட்டு அரசு அலுவலகத்திற்கு தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் உள்ள அனைத்து தலைமை அலுவலகங்களும் வெறிச்சோடி காணப்பட்டன. இரவில் தங்கியிருந்து பணியாற்றும் ஊழியர்கள் கூட யாரும் இல்லை. இந்நேரத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் நள்ளிரவில் இந்த தீ விபத்து நடந்திருக்கிறது.தீ பிடித்த இந்த கட்டடத்தில் காவலர்கள் யாரும் இருந்தனரா, இல்லையா என்றும் தீ பற்றியதன் காரணம் என்னவாக இருக்கும் என போலீஸ் தரப்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சேப்பாக்கில் உள்ள எழிலகம் என்றால் அனைவருக்கும் தெரியும். இந்த அளவிற்கு பழங்கால கட்டடம். இங்கு அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்குள்ள தொழில் வணிக வரி அலுவலகத்தில் இருந்து திடீர் தீ கிளம்பியிருக்கிறது. பின்னர் அருகில் இருந்த சமூக நலத்துறை அலுவலகத்திற்கு தீ பரவியது. தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். படு வேகமாகவும், கொழுந்து விட்டு எரிந்த தீயை அணைக்க 15 க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. கட்டடத்திற்குள் நுழைந்து தீயை அணøக்கும் பணியில் இருந்த மூத்த தீயைணப்பு வீரர் அன்பழகன் மேற்கூரை இடிந்து விழுந்ததில் சிக்கி பலியானார். மத்திய கோட்ட அலுவலர் பிரியா , தீயணைப்பு நிலைய அலுவலர் முருகன், மற்றும் பிரபாகர் ஆகியோர் காயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்ப்பட்டுள்ளனர். தீயை அணைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.