தமிழ்நாடு

கண்காட்சியில் 13 நாளில் விற்ற புத்தகங்கள் 60 லட்சம் வாசகர் மனதில் சத்திய சோதனைக்கு இடம்

Added : ஜன 18, 2012
Advertisement

பதிமூன்று நாட்களாக நடந்த புத்தக கண்காட்சியில், பல்வேறு தலைப்புகளில் வெளிவந்த 60 லட்சம் புத்தகங்கள் விற்பனையாகியுள்ளன. மகாத்மா காந்தியின் சுயசரிதை நூல் சத்திய சோதனை 5,000 பிரதிகள் விற்று, தமிழக வாசகர் மனதில் இடம் பிடித்துள்ளது.13 நாள் காட்சிதென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம், கடந்த 13 நாட்களாக, சென்னையில் புத்தக கண்காட்சியை நடத்தியது. கடந்த செவ்வாயன்று இது நிறைவடைந்தது. ஒரு லட்சம் தலைப்புகளில்,கோடிக்கணக்கான புத்தங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. இதில், 386 பதிப்பகங்கள் அரங்கு அமைத்திருந்தன.60 லட்சம் விற்பனைஎட்டு லட்சம் புத்தக ஆர்வலர்கள் கண்காட்சியை களைகட்ட வைத்தனர். அவர்கள் 60 லட்சம் புத்தகங்கள் அள்ளி சென்றனர். கடந்தாண்டு ஆறு லட்சம் புத்தக ஆர்வலர்கள் வந்தனர்; 45 லட்சம் புத்தகங்கள் விற்பனையானது.

வென்றது சத்திய சோதனைமகாத்மா காந்தியின் சத்திய சோதனை புத்தகம் இந்த கண்காட்சியில் விற்பனையில் சாதனை படைத்துள்ளது. அதிகபட்சமாக 5,000 பிரதிகள் விற்பனையாகியுள்ளது. ஆண்டுக்கு, 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையான இந்த புத்தகம் 13 நாளில் புத்தக கண்காட்சியில், 5,000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. காந்திக்கு அடுத்த இடத்தை அன்னா ஹசாரே தக்க வைத்துக் கொண்டார். மலிவு விலையில் பதிப்பிக்கப்பட்ட அன்னா ஹசாரே பற்றிய புத்தகம் 4,000 பிரதிகள் விற்றது.காவல் கோட்டத்துக்கு மவுசுஇந்த ஆண்டு சாகித்ய அகடமி விருது பெற்ற சு.வெங்கடேசனின் காவல் கோட்டம் நாவல், வாசகர்களால் விரும்பி வாங்கப்பட்டது. பொன்னியின் செல்வன் சரித்திர நாவல், இரண்டு தலைமுறை வாசகர்களாலும் விரும்பி வாங்கப்பட்டது.தனியார் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள், நாவலோடு இசைத் தகடையும் இணைத்து வெளியிட்டது குறிப்பிட்ட அளவு விற்றுள்ளது. கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்து மதம், பூமணியின் அஞ்சாடி, தாஸ்தவெஸ்கியின் அசடன் உள்ளிட்ட புத்தகங்களும் வாசகர்களால் விரும்பப்பட்டது.இதிலும் பின்னடைவுகண்காட்சியின் முல்லைப் பெரியாறு தொடர்பான புத்தகங்கள் வெளிவரவில்லை என்ற, வாசகர்களின் ஏக்கம் 12 நாட்களாக இருந்தது. இறுதி நாளில் சசிகலாவின் கணவர் ம.நடராசன் எழுதிய முல்லைப் பெரியாறு தொடர்பான புத்தகம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. காணும் பொங்கலன்று விற்பனைக்கு வைக்கப்பட்டிருந் தாலும், குறைந்த அளவிலே பிரதிகள் விற்பனையானதாக
விற்பனையாளர் தெரிவித்தார்.

தமிழ் இலக்கிய ஆய்வுகள் குறித்த நூல்கள் அதிக அளவில் விற்பனையாகும் என்று பலத்த எதிர்பார்ப்பு இருந்த போதிலும், விற்பனையில் சூடு குறைந்திருந்தது.பதிப்பாளர்களுக்கு பயிற்சிகண்காட்சி நிறைவு நாளில், 30 ஆண்டுகளாக பதிப்பகங்களை நேர்த்தியாக நடத்தி வரும் 82 பதிப்பகங்களுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழக அரசுடன் இணைந்து கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் நிரந்தர புத்தக கண்காட்சி நடத்தி வருகிறது.விரைவில் திருச்சியிலும் நிரந்தர புத்தக கண்காட்சி நடத்த முடிவெடுத்துள்ளது. தேசிய புத்தக நிறுவனத்துடன் இணைந்து பதிப்பாளர்களுக்கு புத்தகங்கள் பதிப்பது, அழகுபடுத்துவது, விற்பனையில் புதிய உத்திகளை கையாள்வது போன்ற பயிற்சிகளை அளிக்கவும் முடிவெடுத்துள்ளது.

- அ.ப.இராசா -

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X