வெள்ளை மாளிகை வளாகத்தில் புகை குண்டு வீச்சால் பரபரப்பு

Added : ஜன 18, 2012
Share
Advertisement
வெள்ளை மாளிகை வளாகத்தில் புகை குண்டு வீச்சால் பரபரப்பு

வாஷிங்டன் : அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் உள்ள அதிபர் இல்லமான வெள்ளை மாளிகையில், நேற்று புகை குண்டு வீசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வெள்ளை மாளிகை மூடப்பட்டது.

அமெரிக்காவில் அரசியலில் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, "வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம்' கடந்தாண்டு செப்டம்பரில் துவங்கியது. துவங்கிய சில நாட்களிலேயே, இப்போராட்டம் உலகளவில் பரவியது.

தற்போது வரை, அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் சிலர் கூடி, இந்த போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்கின்றனர். இந்நிலையில், கடந்த 17ம் தேதி இரவில், வெள்ளை மாளிகை முன் "வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்ட' இயக்கத்தைச் சேர்ந்த சிலர், வளாக வேலிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

அப்போது, வளாகத்தின் உள்ளே ஓரிடத்தில், புகை குண்டு ஒன்று கிடப்பதை, வெள்ளை மாளிகை பாதுகாப்பு போலீசார் கண்டுபிடித்தனர். உடனடியாக, அந்த குண்டை அங்கிருந்து பத்திரமாக அகற்றினர். தொடர்ந்து, பாதுகாப்பு காரணமாக வெள்ளை மாளிகை ஒரு மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது.

மாளிகையைச் சுற்றியிருந்த தெருக்கள் மூடப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தோர் அமைதியான முறையில் கலைக்கப்பட்டனர். சம்பவம் நடந்த போது, அதிபர் ஒபாமாவும், அவரின் மனைவி மிச்சேலும் மாளிகையில் இல்லை. இதில் யாரும் கைது செய்யப்படவில்லை என, வெள்ளை மாளிகை பாதுகாப்பு போலீசார் தெரிவித்தனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X