பொது செய்தி

தமிழ்நாடு

தீவிரவாதிகளால் சுடப்பட்ட ராணுவ வீரருக்கு விருது: தாய் கண்ணீர் பேட்டி

Added : ஜன 18, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement
தீவிரவாதிகளால் சுடப்பட்ட ராணுவ வீரருக்கு விருது: தாய் கண்ணீர் பேட்டி

காளையார்கோவில்: ""நல்லா இருக்கிறீர்களா என கேட்ட மறுநாளே, காஷ்மீரில் என் மகன் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்தேன். அவரது வீர தீர செயலுக்கு இந்திய ராணுவம் "சேனா' விருது வழங்கி பெருமை சேர்த்துள்ளது,'' என, காளையார்கோவில் ராணுவ வீரர் நாகலிங்கத்தின் தாய் செல்லம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்தார்.


சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே சிறியூரை சேர்ந்தவர் பஞ்சவர்ணம். இவரது மூன்றாவது மகன் நாகலிங்கம், 25. சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கல்லூரியில் பி.காம்., படித்தார். 2004ல் ராணுவத்தில் சேர்ந்த, இவர் 2010 ஜூன் 27ம் தேதி காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டம், நவுகாசில் ராணுவத்திற்கும்- தீவிரவாதிகளுக்கும் இடையே சண்டை நடந்தது. இதில்,நாகலிங்கம், 3 தீவிரவாதிகளை சுட்டு கொன்றார். சக வீரர் சரவணன் குண்டு அடிபட்டு கிடந்த போது, அவரை காப்பாற்ற சென்றார். மறைந்திருந்த தீவிரவாதிகள், நாகலிங்கத்தை சுட்டதில் இறந்தார்.


சேனா விருது: பெங்களூருவில் ஜன.,15ம் தேதி நடந்த ராணுவ தின விழாவில், சிறந்த ராணுவ வீரர்களுக்கு விருது வழங்கப்பட்டது. அதில், நாகலிங்கத்திற்கும் "சேனா' விருது வழங்கப்பட்டது. அவரது தாய் செல்லம்மாளிடம் விருது, ரூ. 25 ஆயிரத்துக்கான காசோலையை, தெற்கு காமாண்டன்ட் லெப்டினன்ட் ஜெனரல் ஏ.கே.சிங் வழங்கினார்.


செல்லம்மாள் கூறியதாவது: இறப்பதற்கு முந்தைய நாள் தான், என்னிடம் என் மகன் "நல்லா இருக்கிறீர்களா' என கேட்டார். மறு நாள் அவர் இறந்த செய்தி கேட்டு மனமுடைந்தேன். அவருக்கு விருது கிடைத்துள்ளதாக வந்த கடிதத்தை பார்த்து கண்ணீர் வடித்தேன். உயிரோடு இருந்து வாங்க வேண்டிய விருதை, இறந்த பின் வாங்கி தந்து எனக்கு பெருமை சேர்த்துள்ளார், என தெரிவித்தார்.


Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வைகை செல்வன் - சென்னை,இந்தியா
19-ஜன-201201:15:32 IST Report Abuse
வைகை செல்வன் My great salute to Mr Nagalingam..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X