ஜெய்ப்பூர் விஜயத்தை ரத்து செய்தார் சல்மான் ருஷ்டி

Added : ஜன 20, 2012 | கருத்துகள் (13) | |
Advertisement
ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் இந்திய பயணம், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார். இதற்காக இவர் புக்கர் விருதை பெற்றுள்ளார். கடந்த 88ம் ஆண்டு "சாத்தானின் கவிதைகள்' என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை

ஜெய்ப்பூர்: சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின் இந்திய பயணம், பாதுகாப்பு காரணங்களுக்காக ரத்து செய்யப்பட்டுள்ளது.


இந்தியாவில் பிறந்து பிரிட்டனின் குடியுரிமை பெற்றவர் சல்மான் ருஷ்டி. பல ஆங்கில நாவல்களை எழுதியுள்ளார். இதற்காக இவர் புக்கர் விருதை பெற்றுள்ளார். கடந்த 88ம் ஆண்டு "சாத்தானின் கவிதைகள்' என்ற புத்தகத்தை எழுதினார். முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் விதத்தில் இந்த நூல் அமைந்ததால், ஈரான் தலைவர் அயதுல்லா கோமெனி, ருஷ்டிக்கு மரண தண்டனை அறிவித்தார். இதற்கு பிறகு ருஷ்டி பல ஆண்டு காலம் பிரிட்டனில் தலை மறைவு வாழ்க்கை நடத்தினார்.


இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடக்கும் இலக்கிய திருவிழாவுக்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். "தாருல் உலூம் தியோபந்த்' உள்ளிட்ட ஏராளமான முஸ்லிம் அமைப்புகளும், முஸ்லிம் மத தலைவர்களும் ருஷ்டியின் இந்திய வருகையை எதிர்த்தன. இதையடுத்து ராஜஸ்தான் முதல்வர் அசோக்கெலாட், மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரத்தை சந்தித்து, "ருஷ்டியின் வருகையை எங்கள் மாநிலத்தவர் விரும்பவில்லை' என, தெரிவித்தார். ருஷ்டி இந்தியா வந்தால் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால், ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் கலந்து கொள்வதை அவர் தவிர்த்து விட்டார். இந்த விழாவில் அவரது உரை வாசிக்கப்பட்டது.


ருஷ்டி தனது உரையில், "இந்திய வருகையையொட்டி நான் எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தேன். இதன் மூலம் மாநில நிர்வாகத்துக்கு எந்த இடைஞ்சலும் ஏற்படக்கூடாது என்பதால், அமைதியாக இருந்தேன். மும்பையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள், என்னை கொல்ல திட்டமிட்டிருப்பதாக புலனாய்வு துறையினர் என்னை எச்சரித்தனர். என்னுடைய வருகையால் சக எழுத்தாளர்களின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடக்கூடாது என்பதால், இந்தவிழாவில் கலந்து கொள்வதை ரத்து செய்துள்ளேன்' என்றார். சல்மான் ருஷ்டி இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டதற்கு, விழாவின் இயக்குனர் வில்லியம் டார்லிம்பிள் வருத்தம் தெரிவித்தார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deepak - Nellai,இந்தியா
21-ஜன-201215:25:38 IST Report Abuse
Deepak இதற்க்கு முன்பு இவர் இந்தியா வரும்போது, இப்போது கூக்குரல் இடும் ........... ள் சும்மா இருந்தன. இப்போது மாநில தேர்தல்களில் ஓட்டு பொய் விடும் என தெரிந்த உடன் பிதற்றுகின்றன
Rate this:
Cancel
mohamed bilal ali - madurai_vandiyur,இந்தியா
21-ஜன-201214:10:43 IST Report Abuse
mohamed bilal ali visit www onlinepj தெய்வத்தை கண்டுபிடிக்கலாம் .
Rate this:
Cancel
samayole sri - mannargudi,இந்தியா
21-ஜன-201206:52:34 IST Report Abuse
samayole sri போலி மத சார்பின்மை என்கிறார்களே ........ அப்படி என்றால் என்ன... இதுக்கும் ருஷ்டிக்கும்... இந்தியாவுக்கும் சம்பந்தமில்லை....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X