பூமியை தாக்கியது சூரிய புயல்; விமானங்கள் மாற்றிவிடப்பட்டன

Updated : ஜன 25, 2012 | Added : ஜன 24, 2012 | கருத்துகள் (54)
Share
Advertisement
வாஷிங்டன்: கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல்
 Flights rerouted as massive solar storm slams Earth,பூமியை  தாக்கியது சூரிய புயல்; விமானங்கள் மாற்றிவிடப்பட்டன

வாஷிங்டன்: கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கியது. இதனால் அமெரிக்காவில் விமானங்கள் திருப்பி விடப்பட்டன.

சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்புறம் அமைதியாகவே இருந்து வருகிறது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி, சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை, ஒரு மணி நேரத்தில் பூமியைத் தாக்கியது. தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை, இன்று, பூமியைத் தாக்கும் என, "நாசா' தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல், மூன்று விதத்தில் நிகழும். முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம். பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதி களவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்கா நேரப்படி செவ்வாய் காலை 10 மணியளவில்(ஜி.எம்.டி., நேரப்படி 15.00) மணியளவில் சூரிய புயல் பூமியை தாக்கியது. இது கடந்த அக்டோபர் 2003ம் ஆண்டை காட்டிலும் ஏற்பட்ட சூரிய புயலை விட அதிகம் என நாசா கூறியுள்ளது. மேலும், சூரிய புயலில் வரும் கதிர்வீச்சு மனிதனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது எனவும் அமெரிக்க விண்வெளி நிறுவனம் கூறியது. இந்த கதிர்வீச்சுக்கள் புதன்கிழமை வரை இருக்கும் எனவும், இதனால் விண்வெளி தொடர்பு, விமான போக்குவரத்து பாதிக்கப்படக்கூடும் என நாசா கூறியுள்ளது. கதிர்வீச்சு குறையும் வரை விமான போக்குவரத்து கண்காணிக்கப்படும்.

Advertisement
வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sevarkodi senthil - chennai,இந்தியா
26-ஜன-201220:04:28 IST Report Abuse
sevarkodi senthil என்னிக்கு இருந்தாலும் இந்த உலகம் ஒருநாள் அழியத்தான் ‌போகுது. அதுல எந்த சந்தேகமும் இல்ல. ஆனா இந்த அண்டத்தில் பூமி மாதிரி வேறு நிறைய கோள்கள் இருக்கலாம். அதை தேடி கண்டுபுடிச்சி அங்கே எதாவது வீடு கட்டிகிட்டா தப்பிச்சோம் . இல்லனா வீட்டு சொந்தகாரர் (சூரியன்) எப்பவேனா டென்சன் ஆவார் போல இருக்கு. லேட் பண்ணா டைனசர்களுக்கு ஆன கதி தான் நமக்கும். ஒவ்வொரு நாடும் தன்னை டெவலப் பண்ற போட்டியில இதையும் கொஞ்சம் கவனிச்சா பரவால ...
Rate this:
Cancel
sevarkodi senthil - chennai,இந்தியா
26-ஜன-201219:56:33 IST Report Abuse
sevarkodi senthil என்னிக்கு இருந்தாலும் இந்த உலகம் ஒருநாள் அழியத்தான் பொது அதுல எந்த சந்தேகமும் இல்ல ஆனா இந்த அண்டத்தில் பூமி மாதிரி வேறு நிறைய கோள்கள் இருக்கலாம் அதை தேடி கண்டுபுடிச்சி அங்கே எதாவது வீடுகட்டிகிட்டா தப்பிச்சோம் . இல்லன விட்டு சொந்தகாரர் (சூரியன்) எப்பவேனா டென்சன் ஆவார் போல இருக்கு லேட் பண்ணா டைனசர்களுக்கு ஆனா கதிதான் நமக்கும் ஒவ்வொரு நாடும் தன்னை டெவலப் பண்ற போட்டியில இதையும் கொஞ்சம் கவனிச்சா பரவால ...
Rate this:
Cancel
Muthuselvan.A - Coimbatore,இந்தியா
25-ஜன-201222:18:41 IST Report Abuse
Muthuselvan.A உலக அழிவை சந்திக்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X