தமிழ்நாடு

பாரதியார் பல்கலையில் சோலார் மின் உற்பத்தி நிலையம்

Added : பிப் 02, 2012 | கருத்துகள் (2)
Share
Advertisement

கோவை : பாரதியார் பல்கலை சார்பில், "சோலார்' மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் முயற்சிகள், முழு வீச்சில் நடந்து வருகின்றன. ஒரு பல்கலை, சோலார் மின் உற்பத்தி நிலையம் அமைப்பது, நாட்டில் இதுவே முதல் முறை.
நாட்டின் மின் தேவைக்கு ஏற்ப, மின் உற்பத்தி அதிகரிப்பதில்லை. இதனால் ஏற்படும் பற்றாக்குறை, மின் உற்பத்திக்கான மாற்று வழிமுறைகளை தேடிச்செல்வதற்கான தூண்டுதலை ஏற்படுத்துகிறது. அரசு, தனியார் என்ற வித்தியாசம் இல்லாமல், அனைவருமே மாற்று வழியில், மின்சாரம் உற்பத்தி செய்யும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதில், கோவை பாரதியார் பல்கலை மேற்கொண்டுள்ள முயற்சி குறிப்பிடத்தக்கது. மருதமலை அடிவாரத்தில் அமைந்துள்ள இந்த பல்கலை வளாகத்தில், சூரிய சக்தியை பயன்படுத்தி, ஐந்து மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு, மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.
பல்கலை இயற்பியல் துறை பேராசிரியர்கள் மத்தியில் ஓராண்டுக்கு முன் உதித்த, இந்த யோசனையை செயல்
படுத்த, 55 முதல் 60 கோடி ரூபாய் வரை செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய மரபு சாரா எரிசக்தி அமைச்சகம் மற்றும் டி.ஆர்.டி.ஓ., சார்பில் வழங்கப்படும் நிதியுடன், பல்கலை நிதியும் திட்டத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும்.
மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, விரைவில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. "திட்டப்பணி தொடங்கிய நாளில் இருந்து, ஆறு மாத காலத்துக்குள் மின் நிலையம் அமைக்கப்பட்டு விடும்' என்று அலுவலர்கள் தெரிவித்தனர்.
துணைவேந்தர் சுவாமிநாதன் கூறுகையில், ""பல்கலை பயன்பாட்டுக்கு, ஒரு மெகாவாட் மின்சாரமே போதும். எனினும், எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு, ஐந்து மெகாவாட் உற்பத்தி செய்யும் சோலார் மின் நிலையத்தை, பல் கலை அமைக்கிறது. பல்கலை பயன்பாடு போக, உபரியாகும் நான்கு மெகாவாட், தமிழக மின் வாரியத்துக்கு வழங்கப்படும்.
""டி.ஆர்.டி.ஓ., அமைப்பும், மத்திய மரபு சாரா எரிசக்தி துறையும் இத்திட்டத்தில் பெரும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்திய தொழில் கூட்டமைப்பின் (சி.ஐ.ஐ.,) கோவை பிரிவினரும், ஆர்வம் காட்டியுள்ளனர். மின் உற்பத்தி, ஆராய்ச்சி என இரு நோக்கங்களுடன் செயல்படுத்தப்படும் இத்திட்டம் நிறைவேறினால், மின் உற்பத்தி நிலையம் அமைத்த முதல் பல்கலை என்ற பெருமை, பாரதியார் பல்கலைக்கு கிடைக்கும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohammed Reegan - dammam,சவுதி அரேபியா
03-பிப்-201205:27:20 IST Report Abuse
Mohammed Reegan பல ஆயிரம் கோடி முதலீட்டில் தொடங்கப்படும் தொழிற்ச் சாலைகளில் ஏன் இந்த திட்டங்களை செயல்படுத்த கூடாது ?
Rate this:
Cancel
Dr. P. Ananda Murugan - Tirupur  ( Posted via: Dinamalar Android App )
02-பிப்-201208:25:58 IST Report Abuse
Dr. P. Ananda Murugan நோக்கம் நிறைவேற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X