மக்களிடம் பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் கபில்சிபல்

Added : பிப் 03, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
மக்களிடம் பா.ஜ., மன்னிப்பு கேட்க வேண்டும்: சொல்கிறார் கபில்சிபல்

புதுடில்லி: சுப்ரீம் கோர்ட்டில் தீர்ப்பு வெளியான சில நிமிடங்களிலேயே, பிரதமரின் ரேஸ்கோர்ஸ் இல்லத்திற்கு, தொலைத் தொடர்பு அமைச்சர் கபில்சிபல் விரைந்தார். அவரைத் தொடர்ந்து, பிரதமர் அலுவலக இணையமைச்சர் நாராயணசாமியும் இணைந்து கொண்டார்.


ஒன்றரை மணிநேர ஆலோசனைக்குப் பிறகு, நிருபர்களிடம் அமைச்சர் கபில்சிபல் கூறியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியின் போது, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்து கொள்கை முடிவு எடுக்கப்பட்டது. 2003 அக்டோபர் 31ம் தேதி அன்று, எடுக்கப்பட்ட அந்த கொள்கை முடிவின்படி, முதலில் வருபவருக்கே முன்னுரிமை என தீர்மானிக்கப்பட்டது. அந்த கொள்கையைத் தான், இப்போதைய அரசாங்கமும் பின்பற்றியது. அந்த கொள்கையில் தான், குறைபாடுகள் இருப்பதாக கோர்ட் கூறியுள்ளது. சுப்ரீம் கோர்ட் அளித்துள்ள தீர்ப்பில், எந்த இடத்திலும், தற்போதைய அரசாங்கம் குறித்து தவறாக கூறவில்லை. எதுவும் இடித்துரைக்கவில்லை. தவிர, பிரதமர் குறித்தோ அல்லது அப்போதைய நிதியமைச்சர் குறித்தோ, எந்த ஒரு விமர்சனமும் தெரிவிக்கப்படவில்லை. நிதியமைச்சகம் அளித்த அறிவுரைகளை ஏற்று, அதை அமல்படுத்த அப்போதைய தொலைத் தொடர்பு துறை அமைச்சர் ராஜா தவறிவிட்டார் என்றே கூறியுள்ளது. ஆக, தேசிய ஜனநாயக கூட்டணி அரசாங்கம் எடுத்த கொள்கை முடிவை தவறு என, சுப்ரீம் கோர்ட் கூறிவிட்டது. எனவே, தவறான கொள்கை முடிவை எடுத்து அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்படுத்தியதற்காக, நாட்டு மக்களிடம் பா.ஜ., தான் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு கபில்சிபல் கூறினார்.


Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
saravana kumaran - New Delhi,இந்தியா
03-பிப்-201209:00:25 IST Report Abuse
saravana kumaran கொஞ்சம் கூட வெட்கம் இல்லாத கபில் சிபல்
Rate this:
Cancel
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
03-பிப்-201208:37:11 IST Report Abuse
uthappa இந்தியாவில் படித்தவன் கூட அரசியலுக்கு வந்து விட்டால் விவஸ்தை இல்லாதவன் ஆகிவிடுகிறான்.உதாரணம் கபில் சிபல்...மீசையில் மண் ஒட்டவில்லை என்று ஒப்பாரி வைக்கிறார்.வெட்க கேடு.நல்ல சிற்பி வாரிசும், சீடர்களும் குருவை மிஞ்சிய நிலைக்கு செல்வார்கள்.ஊரறிந்த திருடனும், வாரிசும், அவன் தொண்டனும், தலைவனை மிஞ்சிய திருடனாகத்தான் இருக்கிறான்.தலைவன் செய்யும் திருட்டுக்கு தொண்டன் சப்பை கட்டலாம், ஆகா கபில் சிபல் வெறும் தொண்டனாகத்தான் தெரிகிறது.
Rate this:
Cancel
Mohanraj - Taipei, Taiwan,இந்தியா
03-பிப்-201208:02:06 IST Report Abuse
Mohanraj Did PM and these minister sp 1.5 hrs to give this answer? God only can save india.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X