4 அணுகுண்டுகள் தயாரித்துள்ளது ஈரான்: இஸ்ரேல் குற்றச்சாட்டு

Added : பிப் 03, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement

ஜெருசலேம்: நான்கு அணு குண்டுகளை ஈரான் தயாரித்துள்ளதாக இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது. ஈரான் அணு சோதனை நடத்துவதாகவும், அணு ஆயுதங்களை தயாரிப்பதாகவும் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் நாடுகள் குற்றம்சாட்டியுள்ளன. ஈரான் மீது பொருளாதார தடையும் விதித்துள்ளது. கடந்த 29-ம் தேதி ஐ.நா. சார்பில் சர்வதேச அணுமுகமை குழு, ஈரான் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளது.
இந்நிலையில் ஈரானி்ன் பரம எதிரியான இஸ்ரேல் , ஈரான் 4 அணு குண்டுகளை தயாரி்த்துள்ளதாக கூறியுள்ளது. இது தொடர்பாக, இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் சர்வதேச பாதுகாப்பு உச்சி மாநாடு நடந்தது.
இதில் அந்நாட்டு ராணுவ உளவு அமைப்பின் தலைவர் ஜெனரல் அவிவ்கோச்சாவி, கூறுகையில், இஸ்ரேலை ஈரான் தாக்கும் நோக்கில், 2 லட்சம் ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4 அணு குண்டுகளை தயாரித்துள்ளது. இதன் மூலம் எந்த நேரமும்,இஸ்ரேலின் முக்கிய நகரங்களை தாக்க சிரியா, லெபான் நாடுகள் வாயிலாக திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Basha - bangalore,இந்தியா
03-பிப்-201210:30:18 IST Report Abuse
Basha 400 க்கும் மேற்பட்ட அணு குண்டுகளை அமெரிக்கா தயாரித்துள்ளது, அதன் மேல் குற்றம் சாட்டு, ஏனென்றால் அணு குண்டு தயாரித்துள்ள நாடுகள் அனைத்தும் தன் நாட்டை காத்துக் கொள்வதற்காகவே வைத்துள்ளன , ஆனால் அமெரிக்கா பிற நாட்டை அழிப்பதற்காகவே வைத்துள்ளது ( ஹிரோஷிமா , நாக சகியை அழித்ததை போல் ) அதனால் அமெரிக்கா விற்கு பயப்படு , ஈரான் உன்னை அழிக்க அணு குண்டை பயன் படுத்தாது, நீயோ அமெரிக்காவோ அதனை அழிக்க முற்பட்டால் அது அணு குண்டை பயன் படுத்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X