சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பள்ளி மாணவியை கடத்திய ஆட்டோ டிரைவருக்கு வலை

Added : ஜூலை 15, 2010 | கருத்துகள் (2)
Advertisement

திண்டிவனம்: பள்ளி மாணவியை கடத்திச்சென்ற ஆட்டோ டிரைவரை போலீசார் தேடி வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த சாரம் கிராமம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் இந்திரா(48). இவரது மகள் ஹெலன் (17), அதே பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பக்கத்து வீட்டில் வசித்த ஜெயராஜ் மகன் சுதாகர், இந்திராவிற்குச் சொந்தமான ஒரு ஆட்டோவை வாடகைக்கு ஓட்டி வந்துள்ளார். அவர் தினந்தோறும் ஹெலனை ஆட்டோவில் பள்ளிக்கு அழைத்துச் சென்று வந்தார். கோடை விடுமுறை முடிந்து பிளஸ் 2 வகுப்பு படித்த ஹெலன் பள்ளிக்கு சென்று வந்தார். கடந்த மாதம் 3ம் தேதி காலை ஆட்டோ டிரைவர் சுதாகர் வழக்கம்போல் ஹெலனை பள்ளிக்கு அழைத்துச் சென்றுள்ளார். மாலையில் பள்ளி முடிந்து இருவருமே வீடு திரும்பவில்லை. இந்திரா கொடுத்த புகாரின் பேரில் ஒலக்கூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்குப் பதிந்து விசாரித்ததில் காதலர்களான சுதாகர்- ஹெலன் இருவரும் வீட்டைவிட்டு வெளியேறி  வேலூரில் திருமணம்  செய்து கொண்டதாக தெரிய வந்தது. தலைமறைவாக உள்ள சுதாகர், ஹெலன் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathya - tokoya,ஜப்பான்
15-ஜூலை-201018:05:38 IST Report Abuse
sathya its love or kidnap.......................
Rate this:
Share this comment
Cancel
jayarani - dubai,இந்தியா
15-ஜூலை-201016:14:49 IST Report Abuse
jayarani இந்த உலகம் மோசமான உலகம். யாரை தான் குற்றம் சொல்வது thank u
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X