தமிழ்நாடு

கோவையில் மின் வெட்டை கண்டித்து 10ல் தொழில் அமைப்புகள் ஆர்ப்பாட்டம்

Added : பிப் 07, 2012
Share
Advertisement
கோவை :கோவையில் மின்வெட்டை கண்டித்து, வரும் 10ம் தேதி கறுப்புக்கொடியேற்றி, ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தை, தொழில்அமைப்புகள் நடத்த முடிவுசெய்துள்ளன.கோவையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, கோவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தொழிலமைப்புகள் இணைந்து நேற்று

கோவை :கோவையில் மின்வெட்டை கண்டித்து, வரும் 10ம் தேதி கறுப்புக்கொடியேற்றி, ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டத்தை, தொழில்அமைப்புகள் நடத்த முடிவுசெய்துள்ளன.
கோவையில் அறிவிக்கப்பட்ட மற்றும் அறிவிக்கப்படாத மின்வெட்டினால், தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீரான மின்சாரம் வழங்க வேண்டும் எனக் கோரி, கோவையில் உள்ள 30க்கும் மேற்பட்ட தொழிலமைப்புகள் இணைந்து நேற்று விவாதித்தன.
கோவையில், எட்டு மணி நேர மின்வெட்டை, ஒரே நேரத்தில், ஒரே சீராக, இடைவிடாது, எட்டு மணி நேரம் அமல்படுத்த வேண்டும்.
குறிப்பிட்ட பகுதிகளில் வாரத்தில் ஒரு நாளோ, இரு நாளோ சீரான மின்வெட்டை அமல்படுத்தலாம்.அதை தவிர்த்த பகுதிகளில், தொழிற்சாலைகள் தொடர்ச்சியாக இயங்க, சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என, வலியுறுத்த தொழிலமைப்புகள் முடிவு செய்துள்ளன.
கோவை மாவட்ட சிறு தொழில் சங்கத் தலைவர் கந்தசாமி, டேக்ட் அமைப்பு மாவட்டத் தலைவர் ஜேம்ஸ்,


டேப்மா சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கூறியதாவது:புதிய அரசு, பதவியேற்று ஆறு மாதங்களில், மின்வெட்டை அகற்றுவதாக அறிவித்திருந்தது. ஆனால், இந்த அறிவிப்புக்கு மாறாக, தற்போது கடுமையான மின்வெட்டு அமல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில், 5000க்கும் மேற்பட்ட தொழில்சாலைகள் மூடப்பட்டுவிட்டன. லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர்.
சென்னையில், ஒரு மணி நேரம் மட்டுமே, மின்வெட்டு அமலில் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளில், பல மணி நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதை சீராக்க வேண்டும். மின்வெட்டை கண்டித்து இரண்டு முறை, உண்ணாவிரதம் இருக்க, அனுமதி கேட்டோம்; அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே, வரும் 10ம்தேதி அனைத்து தொழிற்சாலைகளையும் மூடி, கறுப்புக்கொடி ஏற்றி, தொழிலாளர்களுடன் கறுப்பு பேஜ் அணிந்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்திபுரம், தமிழ்நாடு ஓட்டல் முன், காலை 10.00 மணிக்கு, இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இதில், மின்வெட்டால் பாதிக்கப்பட்ட அனைத்து பொதுமக்களும், தொழில் அமைப்புகள், தொழில் வர்த்தக அமைப்புகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் பங்கேற்கலாம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X