சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு திருமண முயற்சி: தடுத்து நிறுத்திய போலீஸ்

Updated : ஜூலை 17, 2010 | Added : ஜூலை 15, 2010 | கருத்துகள் (34)
Advertisement
சிறுமி,திருமணம், முயற்சி,போலீஸ்,Police, stop,minor girl, marriage, uncle

உசிலம்பட்டி : பதிமூன்று வயதே ஆன சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். உடனே பெண் வீட்டார், விழாவை நிச்சயதார்த்தமாக மாற்றினர்.


உசிலம்பட்டி பகுதி கிராமங்களில், சில பிரிவினர் உரிய வயதை எட்டுவதற்கு முன்பு திருமணம் செய்வது வழக்கம். பெண்கள் பூப்பெய்தினால், அடுத்த நடவடிக்கையாக படிப்பை நிறுத்தி விட்டு மாப்பிள்ளை பார்த்து திருமணம் நடத்துகின்றனர். உசிலம்பட்டி அருகே நக்கலப்பட்டியைச் சேர்ந்த மரியராஜ் - காளியம்மாள் தம்பதியரின் மகன்வழி பேரன் தேவராஜ் (27) என்பவருக்கும், மகள்வழி பேத்தி கவுசல்யா (13) என்பவருக்கும் நேற்று திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. கவுசல்யா எட்டாம் வகுப்பு படிக்கிறார். தேவராஜ் இயந்திர ஆபரேட்டராக பணிபுரிகிறார்.


மணப்பெண்ணிற்கு 18 வயது நிரம்பாத நிலையில் திருமணம் நடக்க உள்ளது குறித்து கிராமத்தைச் சேர்ந்த சிலர், போலீசாருக்கு புகார் அனுப்பினர். உசிலம்பட்டி எஸ்.ஐ., வசந்தி மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் திருமண வீட்டிற்கு சென்றனர். மணப்பெண், திருமண வயதை எட்டவில்லை என்பதால் திருமணம் நடத்தக் கூடாது, என, மணமகன், மணமகள் பெற்றோர் மற்றும் திருமணத்திற்கு வந்திருந்த உறவினர்களிடம் விளக்கினர். நடக்க இருந்த திருமண விழாவை மாற்றி, நிச்சயதார்த்த விழாவாக நடத்தினர். பெண்ணிற்கு 18 வயது நிரம்பிய பின் திருமணம் நடத்திக்கொள்வதாக உறவினர்கள் உறுதி அளித்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (34)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
murugavel - malemaldives,மாலத்தீவு
19-ஜூலை-201010:23:58 IST Report Abuse
murugavel ஹாய் !!! மாப்பிள்ளை சொந்தம் விட்டு போக கூடாதுங்கிரதுக்கு இப்படி கல்யாணம் பண்ண நினைத்தியா. இல்ல நல்ல இள வயசு குட்டியா வேணுமுன்னு இந்த ஐடியா பண்ணி கல்யாணம் பண்ண பார்த்தியா....எப்படி இருந்தாலும் இது ரொம்ப தப்புமா.......
Rate this:
Share this comment
Cancel
viswa - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஜூலை-201018:22:24 IST Report Abuse
viswa இது எல்லாம் ரெம்ப தப்பு.................
Rate this:
Share this comment
Cancel
malik - fintas,குவைத்
17-ஜூலை-201012:51:39 IST Report Abuse
malik பெற்றேர்ர் தன் தலைவலி தீர தன் குழந்தை தலையில் பராங்கல்லை வைப்பது முறையா. உன் பெண்ணை கவனமாக பார்த்துகொள்வதை விட உனக்கு என்ன வேலை
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X