சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா: பட்டதாரி சாதனை| Nano formula : A Saviour for diabetic patients! | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சர்க்கரை நோயாளி புண் ஆற "புது நானோ பார்முலா': பட்டதாரி சாதனை

Added : பிப் 08, 2012 | கருத்துகள் (24)
Share
திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார். சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார். நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை
சர்க்கரை நோயாளி புண் ஆற  "புது நானோ பார்முலா': பட்டதாரி சாதனை

திருப்புவனம்:சர்க்கரை நோயாளிக்கு புண் வந்தால் எளிதில் ஆறாது. எளிதாக புண் ஆற, திருப்புவனம் பட்டதாரி "புது நானோ பார்முலா' கண்டுபிடித்துள்ளார்.


சர்க்கரை நோயாளிகளுக்கு புண் எளிதில் ஆறாது. இதற்கு திருப்புவனம் பட்டதாரி நேசமணி, "புது நானோ பார்முலா' உருவாக்கியுள்ளார்.மதுரை யாதவா கல்லூரியில் "மைக்ரோ பயாலஜி' முடித்துள்ளார்.


நேசமணி கூறுகையில், ""ஒரு வகை தாவர இலையை எடுத்து அதில் நுண்ணுயிரியை (மைக்ரோ ஆர்கனிஸம்) பயன்படுத்தி, இரண்டு நாள் வைத்தால், அதில் இருந்து குறிப்பிட்ட நொதிகள் (என்சைம்ஸ்) உற்பத்தி ஆகும். இந்த நொதிகளுடன் ஒருவகை நானோ கெமிக்கலை சேர்த்து மருந்து தயாரிக்க முடியும். இந்த மருந்தை பயன்படுத்துவதால் சர்க்கரை நோயாளி புண்களில் உள்ள ரத்த நாளங்கள் வேலை செய்து புண்களை அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தலாம். இந்த பார்முலாவை பயன்படுத்தி பிளாஸ்டர் பேண்டேஜ் தயார் செய்யலாம். சென்னை ஐ.ஐ.டி.,யில் சமர்ப்பித்து புதிய கண்டுபிடிப்பாளர் என்று சான்றிதழ் பெற்றுள்ளேன்,'' என்றார்.


இவரை 82201 30443, 86818 35517 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இ-மெயில்: Hitechplasterbandage@gmail.com.


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X