தமிழ்நாடு

மதுரையில் கொசு"கடி' தாங்க முடியல... மின்தடை நேரத்தில் மக்கள் புலம்பல்

Added : பிப் 09, 2012
Share
Advertisement

மதுரை :மதுரையில் மின் வெட்டு நேரத்தில் கொசு "கடி' தொல்லை அதிகரித்து வருவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மின் வெட்டால் பல பிரச்னைகளை சந்திக்கும் மக்களுக்கு, தற்போது கொசுக் "கடி' தொல்லை சவாலாக உள்ளது.
மின்தடை நேரத்தில் கொசுவர்த்தி சுருள், "லிக்யூடு' போன்ற கொசு ஒழிப்பு சாதனங்களை பயன்படுத்தினாலும் கொசு கடியின் தாக்கம் குறையவில்லை. பகல், இரவு இன்றி எப்போது வேண்டுமானாலும் மின்தடை ஏற்படுகிறது. இதில் இரவு நேர மின்தடை மக்களுக்கு சோதனையாக உள்ளது. குறிப்பாக குழந்தைகள் அவதிக்குள்ளாகின்றனர். மாணவர்கள் பாடும் திண்டாட்டம். "இன்வெர்ட்டார்' பயன்படுத்தலாம் என்றாலும், மின் வெட்டு காரணமாக அவற்றுக்கு "சார்ஜ்' ஏற்றுவதும் பிரச்னையாக உள்ளது.
தேர்வு நேரத்தில் இத்தகைய நிலையால் மாணவர்கள் மன ரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.


என்ன ஆச்சு கொசு ஒழிப்பு திட்டம்?
மாநகராட்சியில் செயல்படுத்தப்படும் கொசு ஒழிப்புத் திட்டம் புதிதாக சேர்க்கப்பட்ட வார்டுகளை சென்றடையவில்லை. கொசு மருந்து அடிக்க பழைய 72 வார்டுகளுக்கும் மண்டலத்துக்கு தலா ஒரு வண்டி வீதம் 4 வண்டிகள் மட்டும் உள்ளன. இவற்றின் மூலம் ஒரு வார்டுக்கு 10 நாள்களுக்கு ஒரு முறை வீதம் டீசலுடன் கலந்து "பைரித்திரம்' மருந்து அடிக்கப்படுகிறது. அதேபோல் "கம்பூசியா' என்ற மீன் வளர்க்கும் திட்டம் மூலம் "லார்வா' பருவ கொசுக்கள் ஒழிக்கும் திட்டமும் நிதிநிலை காரணமாக பெயரளவில் செயல்படுகிறது. "ஏ.எல்.' கொசு ஒழிப்புத் திட்டம் மூலம் கொசு உற்பத்தியாகும் நீர்நிலைகளில் "பயோ லார்விசைடு' மருந்து தெளிக்கும் திட்டமும் தினக்கூலி தொழிலாளர்கள் மூலம் செயல்படுத்தப்படுகிறது.


மருந்து வண்டிகள் பற்றாக்குறை:
விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிக்கு கூடுதலாக 4 வண்டிகள் தேவை. வண்டிகள் இல்லாததால், அனைத்து பகுதிகளுக்கும் கொசு மருந்து அடிக்க முடியவில்லை.
முதன்மை நகர்நல அலுவலர் சுப்பிரமணியன் கூறியதாவது: கொசு மருந்து அடிக்கும் வண்டிகள் மேலும் 4 வாங்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தால் நோய்களை பரப்பும் "டைகர் மஸ்கிடோஸ்' கொசு 90 சதவிகிதம் ஒழிக்கப்பட்டுள்ளது. நோய் பாதிப்பை ஏற்படுத்தாத கொசுக்கள் உற்பத்தி தற்போது அதிகரித்துள்ளது, என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X