சம்பவம் செய்தி

தமிழ்நாடு

உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

Updated : பிப் 09, 2012 | Added : பிப் 09, 2012 | கருத்துகள் (58)
Advertisement
உயிருக்கு உயிரான தோழியிடம் பாலியல் பலாத்காரம்: இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் கைது

அனகாபுத்தூர்:குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்து, மயக்க நிலையில் பெண்ணை இரவு முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்த மாணவர்களை, போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். உயிருக்கு உயிராக பழகிய தோழியை, மிருகத்தனமாக இம்சித்த இந்த செயல், மாணவர்கள் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் காஞ்சனா; விதவை. தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவரது மகள் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.
தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.
கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர். அங்கு அரவிந்த் சந்தோஷ், நவீன், அரிஹரன், தீபன்குமார் ஆகியோர் மது போதையில் இருந்தனர்."ஏன் பொய் சொல்லி என்னை அழைத்து வந்தீர்கள்' என கவிதா கேட்ட போது, "சும்மா தான்' என கூறி சமாளித்துள்ளனர்.சிறிது நேரத்தில் சிவானந்தமும் மது குடித்தார். போதை ஏறியதும், குளிர்பானத்தில் மதுவை கலந்து பெண்ணுக்கு கொடுத்தனர். அவர் மறுத்தும் வலுக்கட்டாயமாக குடிக்க வைத்தனர். போதை ஏறியதும், வாலிபர்கள் அனைவரும் அவரை பலாத்காரம் செய்துள்ளனர்.
இரவு முழுவதும் ஐந்து பேரும் மாறி மாறி பலாத்காரம் செய்ததால், சுய நினைவு இழந்த பெண்ணை, பல்லாவரத்தில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மறுநாள் காலை 10 மணிக்கு வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். அப்போதும் சரியாக நினைவு திரும்பவில்லை. பெண்ணின் தாய் சிவானந்தத்திடம் கேட்ட போது, "என்ன நடந்தது என்று தெரியவில்லை' என்று கூறியுள்ளனர்.
இதற்கிடையே நினைவு திரும்பிய பெண், "ஏன்டா இப்படி மாறி மாறி என்ன சீரழிக்கிறீங்க' என முனகியதும், தாய் அதிர்ச்சியடைந்தார். குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பெண்ணை அழைத்துச் சென்றார். டாக்டர்கள், எழும்பூர் மகப்பேறு மருத்துவமனைக்கு பரிந்துரைத்து அனுப்பி வைத்தனர். எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மாணவர் விஷம் குடிப்பு:பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர் . தலைமறைவாக இருந்த மாணவர் நவீன், விஷம் குடித்தது தற்போது தெரியவந்துள்ளது. காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. போலீஸ் தேடுவதை அறிந்ததும் நவீன், வகுப்பில் இருந்து நண்பர்கள் தங்கியிருந்த விடுதிக்கு சென்றார். அங்கு ஆல் அவுட் கொசு மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மற்ற மாணவர்கள் அவரை, கட்டாங்கொளத்தூரில், தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். உயிருக்கு ஆபத்தாக எதுவும் இல்லை என்பதால், அவரை கைது செய்ய போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (58)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohamed Thasthageer , usa, california - yubacity,யூ.எஸ்.ஏ
11-பிப்-201200:13:15 IST Report Abuse
Mohamed Thasthageer , usa, california நண்பர்களே சகோதர, சகோதரிகளே நவீன காலம் இது. இதில் உண்மை எது போலி எது என்பதை கண்டு பிடிக்கவே வெகு காலம் எடுக்கும். இந்த அவசர யுகத்தில் இது எல்லாம் கானல் நீர்தான். மது தீமைகளின் தாய் என முஹமது நபி (ஸல்)அவர்கள் அருளியுள்ளார்கள். இரத்தம் சம்பந்த பட்ட உறவுகளை தவிர்த்து அன்னிய ஆணும்.பெண்னும் தனித்திருந்தால் அங்கே சைத்தான் இருப்பதாக இஸ்லாம் சொல்கிறது.Mohamed Thasthageer - usa california.
Rate this:
Share this comment
Cancel
Ramesh Ram - Tindivanam,இந்தியா
10-பிப்-201222:13:29 IST Report Abuse
Ramesh Ram nalla fri............
Rate this:
Share this comment
Cancel
Arthi - NY,யூ.எஸ்.ஏ
10-பிப்-201220:10:21 IST Report Abuse
Arthi முதலில் பெண்களுக்கு பெண் நடப்பு மட்டும் போதும். ஆண் நண்பர்கள் வகுபரையுடன் முடிவுபெற்றிடவேண்டும். பெண்கள் தங்களை பற்றி குடும்பத்தை பற்றி .. பிற தங்களை பற்றிய எந்த தகவல்களையும் ஆண் நண்பர்களுக்கு தெரியபடுத்தகூடாது. ஆண் நண்பர்களை வீட்டுக்கு அழைத்துவரும் பழக்கம் கூடாது. ஆண் நண்பர்களை தொட்டு பேச அனுமதிக்கவேகுடது. கண்ணியமாக ஒரு எளிய இடைவெளிவிட்டே பழகவேண்டும். அதேபோல் பெண்கள், ஆண் நண்பர்களிடம் அவர்களை பற்றி தெரிந்து கொள்ள முயற்சிக்க கூடாது. படிப்பு, பொதுஅறிவு, நாட்டு நடப்பு, இது போன்ற பொதுவான விஷயங்களை மட்டுமே பேசி பகிர்ந்துகொள்ள வேண்டும். பெண்கள் தேவையல்லாத இடம் கொடுக்கும் போதுதான் ஆண் நண்பர்களுக்கு தவறு செய்ய தோன்றும் தவறையும் யோசிக்காமல் செய்வர். முதலில் கைபேசி உபயோகத்தை நிறுத்த வேண்டும். 5 வருடம் முன்பு எல்லா மாணவர்களிடமும் இது இல்லை. யாரும் நன்றாக கல்வி பயில வில்லையா? இன்டர்நெட்இல் படிப்பு தவிர வேற உபயோகம் இருக்ககூடாது. படிக்கும் வயசில் தான் நன்றாக படிக்கச் முடியும். எல்லாம் செய்வதற்கு ஒவ்வொரு வயசு இருக்கிறது. எல்லாவற்றையும் பள்ளி கல்லூரியிலே செய்துவிட்டால், படிப்பை வயது சென்ற பிறகா படிக்க முடியும்? பெற்றோரும் பெண்களை கண்டித்துதான் வளர்க்கவேண்டும் ஆண் பிள்ளைகளை கண்ணியமாக நடந்துகொள்ள வளர்க்கவேண்டும் பெண் பொறுக்கிகளாக வளர்க்ககூடாது. எல்லோரும் நன்றாக கல்வி பயிலுங்கள் உங்கள் வாழக்கை சீராகவும் சிறக்கவும் செய்யும். இந்த நாட்டிலும் நல்ல குடிமக்கள் உருவாகுவார்கள். நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும். இப்போது பதிக்க பட்ட இந்த பெண்ணிற்கு நண்பர்களும் உறவினர்களும் பக்கத்துக்கு வீடுகரர்களும் ஆறுதல் கூறி வாழ்கையில் சாதிக்கவும் உதவுங்கள் என்று கேட்டுகொள்கிறேன். வளமான வாழ்கை எதிகாலத்தில் அமைய வாழ்த்துகள் தோழி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X