இந்தியா

துவங்கியது உ.பி. இரண்டாம் கட்ட தேர்தல்

Updated : பிப் 11, 2012 | Added : பிப் 11, 2012
Share
Advertisement

லக்னோ: உத்தர பிரதேசத்தில் இன்று இரண்டாவது கட்ட சட்டசபை தேர்தல் நடக்கிறது. உத்தர பிரதேசத்தில் இந்த மாதமும், அடுத்த மாதமும் ஏழு கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்து விட்டது. இரண்டாவது கட்ட தேர்தல், இன்று 10 மாவட்டங்களில் உள்ள 59 தொகுதிகளில்துவங்கியது.
103 கிரிமினல்கள்: இன்றைய தேர்தலில் 1,098 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 1.92 கோடி வாக்காளர்கள் ஓட்டு போட உள்ளனர். இதற்காக 20,425 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்றைய தேர்தலில் 31 தற்போதைய எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் 24 முன்னாள் அமைச்சர்களின் வெற்றி நிர்ணயிக்கப்பட உள்ளது. உ.பி.,யின் நான்காவது கட்ட தேர்தலில், கிரிமினல் குற்றம் சாட்டப்பட்ட 103 வேட்பாளர்கள் களத்தில் உள்ளதாக முன்னாள் டி.ஜி.பி.,திவேதி தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சியின் சார்பில் போட்டியிடும் 29 பேர் மீதும், காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் 25 பேர் மீதும், பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 18 பேர் மீதும், பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த 11 பேர் மீதும், அமைதி கட்சி சார்பில் ஏழு பேர் மீதும், அப்னா தள் கட்சியை சேர்ந்த ஐந்து பேர் மீதும் கிரிமினல் வழக்குகள் உள்ளன. லக்னோ தொகுதியில் போட்டியிடும் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ரவிதாஸ் மெஹ்ரோத்ரா மீது 17 கிரிமினல் வழக்குகள் உள்ளன. இன்றைய தேர்தலில் போட்டியிடுபவர்களில் 139 வேட்பாளர்கள் கோடீஸ்வரர்கள்.
குஜராத் முதல்வர் மோடி பிரசாரம்: பஞ்சாப், உத்தரகண்ட் மாநிலங்களில், பா.ஜ.,வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதை தவிர்த்த, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, உத்திர பிரதேச மாநிலத்தில் பிரசாரம் செய்வார் என, பா.ஜ., கட்சியின் துணைத் தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி நேற்று நிருபர்களிடம் கூறினார். "உ.பி.,யில் பா.ஜ.,வுக்கு ஆதரவாக மோடி நிச்சயம் பிரசாரம் செய்வார். ஆனால், அவர் பிரசாரம் செய்யும் தேதிகள் இன்னும் முடிவாகவில்லை. பிரசாரம் செய்வது தொடர்பாக மோடியிடம் பேசி விட்டோம். அவரும் ஒப்புதல் அளித்து விட்டார். குஜராத் மாநிலத்தில் மேற்கொள்ள வேண்டியிருந்த சில பணிகள் காரணமாக, அவரால், பஞ்சாப், உத்தகண்ட் மாநிலங்களில் பிரசாரம் செய்ய முடியவில்லை' என்றும் நக்வி மேலும் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X