சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாலியல் பலாத்காரம் செய்து 4 வயது பெண் குழந்தை கொலை : பிரேத பரிசோதனையில் "பகீர்' தகவல்

Added : பிப் 12, 2012
Advertisement

திருச்சி : திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் அருகே, தனியார் இடத்தில் இறந்து கிடந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. திருச்சி, சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட் பின்புறம், ரோஷன் திருமண மண்டபம் அருகே, பி.எல்.ஏ., நிறுவனத்துக்குச் சொந்தமான காலி நிலம் உள்ளது. இந்த இடம் பயன்படுத்தப்படாமல், பாழடைந்த நிலையில் உள்ளது.

கடந்த மாதம் 31ம் தேதி, காலை எட்டு மணிக்கு, அந்த இடத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க பெண் குழந்தை, இறந்த நிலையில் படுக்க வைக்கப்பட்டிருப்பதை, அப்பகுதி மக்கள் கண்டனர். இது குறித்து, பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்கு கண்டோன்மென்ட் எஸ்.ஐ.,க்கள் பால்ராஜ், ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் வந்து, குழந்தையின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இறந்து கிடந்த குழந்தையை காணோம் என்று யாரும் வராததால், நான்கு நாட்கள் கழித்து, போலீசார் குழந்தையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, புதைத்து விட்டனர்.

பிரேத பரிசோதனையில், அந்த நான்கு வயது பெண் குழந்தை, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதும், அதன் விலா எலும்புகள் நொறுங்கியிருந்ததும் தெரிய வந்துள்ளது. முதலில், அனாதை குழந்தை என்று மெத்தனமாக இருந்த கண்டோன்மென்ட் போலீசார், கொடூரமான கொலை என்றதும், பெண் குழந்தை யார் என்பதை அறிய, போட்டோவுடன், பள்ளிகளிலும், ரோட்டோரத்தில் தங்கியிருக்கும் குடும்பங்களிடமும், விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X