சென்னை : ஆபாச படம் காட்டி, சிறுமிகளிடம் சில்மிஷம் செய்த பேன்சி கடைக்காரரையும், அவருக்கு உடந்தையாக இருந்த பெண் ஒருவரையும் போலீசார் கைது செய்தனர்.
சென்னை, அசோக்நகர் காமராஜர் சாலையில், பேன்சி ஸ்டோர் நடத்தி வருபவர் காதர்மொய்தீன், 40. கடையை ஒட்டிய வீட்டில் உள்ள, 14 வயதுள்ள இரு சிறுமிகளை அழைத்து, ஆபாச படம் காட்டியதோடு, அவர்களிடம் சில்மிஷ வேலைகளில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமிகளின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில், கே.கே.நகர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்தனர்.
இதற்கு, அதே வீட்டில் மேல் மாடியில் குடியிருக்கும் ராஜேஸ்வரி, 45 என்பவர் உடந்தையாக இருந்தது தெரிந்தது. இதையடுத்து, காதர்மொய்தீன், ராஜேஸ்வரி இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.