சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மத்திய டாக்டர்கள் குழு முற்றுகை : சித்தா மாணவர்கள் முடிவு

Added : பிப் 13, 2012
Share
Advertisement

திருநெல்வேலி : நெல்லை பாளயங்கோட்டை அரசு சித்தா மருத்துவ மாணவர்களின் போராட்டம், இன்று 8வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், இன்று, ஸ்டான்லி ஜோன்ஸ், பானுமதி உள்ளிட்ட டாக்டர்கள் அடங்கிய இந்திய மருத்துவ மத்திய டாக்டர்கள் குழு, பாளையங்கோட்டை அரசு சித்தா கல்லூரியில் ஆய்வு மேற்கொள்கிறது. 201-2-13ம் கல்வியாண்டில் மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆய்வு செய்ய இக்குழு வருகை தரஉள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு, இக்குழு ஆய்வு செய்ய வருகை தந்தபோது, கல்லூரியில் அடிப்படை வசதிகள் இல்லை என்று மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது நினைவிருக்கலாம். இந்நிலையில், சென்னையில் இருந்து வரும் குழுவினர், போராட்டம் நடத்தி வரும் முதலாம் ஆண்டு மாணவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆய்வுக்கு வரும் குழுவை முற்றுகையிடப் போவதாக, போராட்ட மாணவர்கள் அறிவித்திருப்பது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X