சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சித்தா மாணவர்கள் காதில் பூ:9 வது நாளாக போராட்டம்

Added : பிப் 14, 2012 | கருத்துகள் (1)
Share
Advertisement
சித்தா மாணவர்கள் காதில் பூ:9 வது நாளாக போராட்டம்

திருநெல்வேலி:பாளையங்கோட்டை சித்த மருத்துவக்கல்லூரி மாணவர்கள், காதில் பூ வைத்து 9வது நாள் போராட்டத்தை தொடர்ந்தனர்.கடந்த ஆண்டு ஆய்வுக்கு வந்த மத்திய சி.சி.ஐ.எம்., குழுவினர் பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை என கூறிவிட்டனர். இதனால் சித்த மருத்துவக்கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் இன்னமும் துவங்கவில்லை. தமிழக அரசு நடத்திய கவுன்சிலிங்கில் தேர்வாகி, கட்டணங்கள் செலுத்தியும் இளங்கலை மாணவர்கள் 100 பேர், முதுகலை மாணவர்கள்60 பேர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளது. கல்லூரி, விடுதி கட்டணம் செலுத்திவிட்டனர்.


கல்லூரி வளாகத்தில் நேற்று 9வது நாளாக மாணவ, மாணவிகள் காதில் பூவைத்தும் நெற்றியில் நாமத்தை இட்டும் போராட்டத்தை தொடர்ந்தனர். காங்., எம்.பி., ராமசுப்பு, தி.மு.க., எம்.எல்.ஏ., மைதீன்கான், தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., தங்கவேலு என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்களை சந்தித்து பேசிவருகின்றனர். தமிழக அரசு அதிகாரிகளோ, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., எம்.பி.,க்களோ வந்து பார்க்கவில்லை.


Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.SESHAGIRI - ALWARTHIRUNAGARI,இந்தியா
15-பிப்-201222:41:06 IST Report Abuse
A.SESHAGIRI சில அரசியல் கட்சிகளுக்குதான் புத்தி இல்லை என்றால் சித்த மருத்துவம் படிக்கும் மாணவ மாணவிகளுக்குமா புத்தி இல்லாமல் போய்விட்டது? அவர்களின் போராட்டம் எவ்வளவு தூரம் நியாமாக இருந்தாலும் அதற்காக வைணவர்களின் மனத்தை புண் படுத்தும் விதமாகவும் ,நெற்றியில் திருநாமம் தரிப்பதின் மேன்மையை உணாராமலும்,இப்படி நாமத்தை அணிந்து கொச்சை படுத்துவது? இந்து மதத்தை சார்ந்தவராக இருந்தும்,படித்தும் தங்கள் மதம் பற்றிய அறிவில்லாத இவர்களை என்ன செய்வது.இதில் ஒரு விஷயம் இஸ்லாம்,மற்றும் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த மாணவ மாணவிகள் இந்த இழிவான காரியத்தில் ஈடுபடாததையும் புகைப்படத்தில் காண முடிகிறது.அரசும் இந்த மாதிரி அடுத்தவர்களின் உணர்வை புண்படுத்துவர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X