சம்பவம் செய்தி

தமிழ்நாடு

20ஐ மணந்த 21 வயது மாணவி திருமணம் செல்லாது என பிரிப்பு

Added : ஜூலை 16, 2010 | கருத்துகள் (3)
Advertisement

ஆத்தூர்: ஆத்தூர் அருகே திருமண வயதடையாத மாணவனை, கல்லூரி மாணவி திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே கிழக்கு ராஜாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சகுந்தலா (21, பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவர் தேவியாக்குறிச்சியிலுள்ள மகளிர் கல்லூரியில் பி.எஸ்சி., படித்து வருகிறார்.தம்மம்பட்டி உலிபுரத்தை சேர்ந்த மாணவர் செந்தில்குமார் (20). அவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தனர்.


கடந்த 11ம் தேதி காதல் ஜோடி சகுந்தலாவும், செந்தில்குமாரும் வீட்டை விட்டு வெளியேறி திருச்சி உச்சிபிள்ளையார் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.பின், காதல்ஜோடி பாதுகாப்பு கேட்டு ஆத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் தஞ்சமடைந்தனர்.காதல் ஜோடி வயது சான்றிதழை போலீஸார் சரிபார்த்து, விசாரணை நடத்தினர். அதில், மாணவி சகுந்தலாவுக்கு திருமண வயதும், மாணவர் செந்தில்குமாருக்கு 20 வயது என்பதும் தெரியவந்தது. திருமண வயதை எட்டாததால் மாணவர் செந்தில்குமாரின் திருமணம் செல்லாது என தெரிவிக்கப்பட்டது.அதை கேட்டு செந்தில்குமாரும், சகுந்தலாவும் அதிர்ச்சிக்குள்ளாகி அழுதனர். இருதரப்பு பெற்றோரிடமும் ஆத்தூர் மகளிர் ஸ்டேஷன் எஸ்.ஐ., வளர்மதி பேச்சுவார்த்தை நடத்தினர். அதன்பின் மாணவி சகுந்தலாவை, அவரது பெற்றோருடன் போலீஸார் அனுப்பி வைத்தனர்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pushpa - Kallakurichi,இந்தியா
19-ஜூலை-201017:59:05 IST Report Abuse
Pushpa Enna Kodumai சார், இது.............
Rate this:
Share this comment
Cancel
வெங்கட் - hyderabad,இந்தியா
16-ஜூலை-201009:58:44 IST Report Abuse
வெங்கட் இது கொஞ்சம் கூட சரியில்லை ......
Rate this:
Share this comment
Cancel
கே.JEEVITHAN - VILLUPURAM,இந்தியா
16-ஜூலை-201009:13:21 IST Report Abuse
கே.JEEVITHAN போலீஸ் சுறுசுறுப்பாக இயங்குகிறது என்று தெரிகிறது. இன்றைக்கு இம்மாதிரியான செய்திகள் நிறைய வந்திருக்கின்றன.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X