கர்நாடக அமைச்சர்கள்:7 பேர் விசாரணைக்குழு அமைப்பு

Added : பிப் 17, 2012
Share
Advertisement

பெங்களுரூ: கர்நாடகா சட்டசபையில் மொபைல் போனில் ஆபாச படம் பார்த்தது தொடர்பாக மூன்று அமைச்சர்களை விசாரிக்க 7 பேர் கொண்ட குழுவை நியமித்து அம்‌மாநில சபாநாயகர் து உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 8-ம் தேதி நடந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது மொபைல் போனில் ஆபாச படம் பாரத்ததாக மூன்று அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது. இதனை தனியார் டி.வி. படம் பிடித்தது சர்ச்சையை கிளப்பியது. இதனால் அமைச்சர்களான லட்சுமண் சவதி, சி.சி.பாட்டீல், மொபைலுக்கு சொந்தக்காரரான அமைச்சர் கிருஷ்ண பலேமர் மூன்று ‌பேரும் ராஜினாமா செய்தனர்.
இது தொடர்பாக அவர்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பி விளக்கம் அளிக்குமாறு நேற்று (வியாழன்) வரை கெடு விதித்தார். அதன்படி விளக்கம் அளிக்காததால், 7 பேர் கொண்ட குழுவை அமைத்து சபாநாயகர் போப்பையா ‌உத்தரவிட்டார்.
இதில் 4 பா.ஜ. எம்.எல்.ஏ.கள், 2 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்.கள், ஒரு மதச்சார்பற்ற ஜனதாதள் எம்.எல்.ஏ. ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இவர்கள் மார்ச் 13-ம் தேதிக்குள் தங்களது அறிக்கையினை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் ம.ஜ.த கட்சி பங்கேற்பதில்லை என அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X