பதிவு செய்த நாள் :
கருத்துகள் (25)  கருத்தை பதிவு செய்ய
எழுத்தின் அளவு:

கடந்த ஆண்டை விட, 900 மெகாவாட் அளவுக்கு, இவ்வாண்டு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்வெட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு அதுவும் முக்கியக் காரணம் என , மின்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
10 சதவீதம் அதிகம்:இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 8 சதவீத அளவுக்கு மின்சார பயன்பாடு அதிகரிக்கும். இதைக்கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிக்க, மின்துறை நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், இந்த முறை, ஏற்கனவே வரவேண்டிய புதிய மின் உற்பத்தி திட்டங்கள், எதிர்பாராத அளவுக்கு காலதாமதம் ஆகிவிட்டதால், மின்சார உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் ஆகியவற்றில், உற்பத்தி குறைந்து விட்டது.நிதி நெருக்கடியால், வெளிச்சந்தையிலும், தனியார் மின் நிலையங்களிலும், மின்சாரம் கொள்முதல் செய்வது பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக கிடைக்கும் மின்சாரத்தை விட, குறைந்த மின்சாரமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. அதேசமயம், மின்சார பயன்பாடு, கடந்த ஆண்டை விட 10 சதவீத அளவுக்கு, அதிகரித்துள்ளது. அதனால் தான், இந்த அளவுக்கு மோசமான

மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு
அவர் கூறினார்.342 மெகாவாட் குறைவு:மின்துறையின் புள்ளி
விவரக்கணக்கில், கடந்த 18ம் தேதி
நிலவரப்படி, முந்தைய ஆண்டு தேவையை
விட, இந்த ஆண்டு மின் தேவை
அதிகரித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. கடந்த 2011, பிப்., 18ம் தேதி, 9,140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது; 22.14 கோடி யூனிட் மின்சாரம் பயன்பட்டுள்ளது; 2.10 கோடி
யே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டுள்ளது. இதன்படி
பார்த்தால், கடந்த ஆண்டு, ஒரு நாளில், 24.24 கோடியே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.ஆனால், இந்த ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி, 8,798 மெகாவாட் தான் உற்பத்தியாகி உள்ளது. 19.37 கோடியே, 52 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது; 6.65கோடியே, 53 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டால் சமாளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தமாக, 26.03 கோடியே, ஐந்தாயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மின்சார தேவை, 900 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்
உற்பத்தியோ, கடந்த ஆண்டை விட, 342 மெகாவாட் குறைவாகவே உள்ளது. அதனால்தான், இந்த

Advertisement

அதிகப்படியான மின்வெட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jamal - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-201219:32:22 IST Report Abuse
jamal அட பண்டார பரதேசி அரசியல்வாதிகளா.உங்கள் வீடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.ஓட்டு போட்ட நாங்கள் கேனையர்களா? இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாமலா நீங்களும் உங்கள் தானை தலைவியும் (தூ..)எங்களிடம் ஓட்டு பிச்சை வாங்கி ஆட்சியை பிடித்தீர்கள்..பண்ணாடைகளா..உங்களால் திறம்பட ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் கவர்னர் ஆட்சிக்கு வழிவிட்டு தேர்தல் நடத்தி புது அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வழி வகை செய்யுங்கள்...இப்பொழுதைய சூழ்நிலையில் மக்கள் மிக தெளிவாக யாரை கொண்டுவர வேண்டும் என்கின்ற தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள்......தென்காசி ஜமால்...
Rate this:
Share this comment
Cancel
devaraya kumaravel - mysore,இந்தியா
22-பிப்-201201:13:27 IST Report Abuse
devaraya kumaravel When i saw any news about power cut i remember only Vadivel dialauge "இந்த தமிழர்கள் ரொம்ப நல்லவங்க ,எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வார்கள் , For the last 40 years so much torture given to tamilnadu people by this DMK and ADMK ,still there are people to support them and write comments praising them
Rate this:
Share this comment
Cancel
ashok kumar - coimbatore,இந்தியா
21-பிப்-201202:13:16 IST Report Abuse
ashok kumar கூடங்குளம் மின்சாரம் மொத்தமா தமிழ்நாட்டுக்கே குடுத்தாலும், அரசியல்வாதிகளை வரவேற்பதுக்கும், மேடை பேச்சுக்கும், மின் திருட்டுக்கும், அரசாங்க அதிகாரிகள் ஊழால் பொய் கரண்டு பில்லும் நம்மை ஒரு வருடத்திற்குள் இதே நிலைமையில் கொண்டு வந்து விட்டுரும். கூடங்குளம் திறக்காமல் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Bench Mani - Chennai,இந்தியா
21-பிப்-201202:05:57 IST Report Abuse
Bench Mani குஞ்சுமணி, திரு நங்கைகளுக்கு அரசு வீடுகளில் ஒதுக்கீடு. அவன் கேட்டது கிடைச்சிருச்சு. பாராட்டாம எங்க போய் தொலைஞ்சே.
Rate this:
Share this comment

Microsoft OLE DB Provider for SQL Server error '80040e31'

Query timeout expired

/xtralog_load.asp, line 349