கடந்த ஆண்டை விட 900 மெகாவாட் தேவை அதிகரிப்பு: அதிக மின்வெட்டுக்கு இதுவும் காரணமாம்| கடந்த ஆண்டை விட 900 மெகாவாட் தேவை அதிகரிப்பு:அதிக மின்வெட்டுக்கு இதுவும் காரணமாம் | Dinamalar
பதிவு செய்த நாள் :
கருத்துகள் (25)  கருத்தை பதிவு செய்ய

கடந்த ஆண்டை விட, 900 மெகாவாட் அளவுக்கு, இவ்வாண்டு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. மின்வெட்டு அளவு அதிகரித்துள்ளதற்கு அதுவும் முக்கியக் காரணம் என , மின்துறையின் புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.
10 சதவீதம் அதிகம்:இதுகுறித்து, மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பொதுவாக, தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 8 சதவீத அளவுக்கு மின்சார பயன்பாடு அதிகரிக்கும். இதைக்கருத்தில் கொண்டு, மின்சார உற்பத்தியை அதிகரிக்க, மின்துறை நடவடிக்கை எடுக்கும்.
ஆனால், இந்த முறை, ஏற்கனவே வரவேண்டிய புதிய மின் உற்பத்தி திட்டங்கள், எதிர்பாராத அளவுக்கு காலதாமதம் ஆகிவிட்டதால், மின்சார உற்பத்தியில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அனல்மின் நிலையங்கள், நீர் மின் நிலையங்கள் ஆகியவற்றில், உற்பத்தி குறைந்து விட்டது.நிதி நெருக்கடியால், வெளிச்சந்தையிலும், தனியார் மின் நிலையங்களிலும், மின்சாரம் கொள்முதல் செய்வது பெருமளவு நிறுத்தப்பட்டுள்ளது. அதனால், வழக்கமாக கிடைக்கும் மின்சாரத்தை விட, குறைந்த மின்சாரமே தமிழகத்திற்கு கிடைக்கிறது. அதேசமயம், மின்சார பயன்பாடு, கடந்த ஆண்டை விட 10 சதவீத அளவுக்கு, அதிகரித்துள்ளது. அதனால் தான், இந்த அளவுக்கு மோசமான

மின்சார தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு
அவர் கூறினார்.342 மெகாவாட் குறைவு:மின்துறையின் புள்ளி
விவரக்கணக்கில், கடந்த 18ம் தேதி
நிலவரப்படி, முந்தைய ஆண்டு தேவையை
விட, இந்த ஆண்டு மின் தேவை
அதிகரித்துள்ளது தெளிவாக தெரிய வருகிறது. கடந்த 2011, பிப்., 18ம் தேதி, 9,140 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகி உள்ளது; 22.14 கோடி யூனிட் மின்சாரம் பயன்பட்டுள்ளது; 2.10 கோடி
யே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டு மூலம் சமாளிக்கப்பட்டுள்ளது. இதன்படி
பார்த்தால், கடந்த ஆண்டு, ஒரு நாளில், 24.24 கோடியே, 63 ஆயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.ஆனால், இந்த ஆண்டு, பிப்ரவரி 18ம் தேதி, 8,798 மெகாவாட் தான் உற்பத்தியாகி உள்ளது. 19.37 கோடியே, 52 ஆயிரம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது; 6.65கோடியே, 53 ஆயிரம் யூனிட் மின்சாரம், மின்வெட்டால் சமாளிக்கப்பட்டுள்ளது. அதாவது, மொத்தமாக, 26.03 கோடியே, ஐந்தாயிரம் யூனிட் மின்சாரம் தேவைப்பட்டுள்ளது.கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு மின்சார தேவை, 900 மெகாவாட் அளவுக்கு அதிகரித்துள்ளது. ஆனால், மின்
உற்பத்தியோ, கடந்த ஆண்டை விட, 342 மெகாவாட் குறைவாகவே உள்ளது. அதனால்தான், இந்த

Advertisement

அதிகப்படியான மின்வெட்டு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக, மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். - நமது சிறப்பு நிருபர் -
Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (25)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jamal - jeddah,சவுதி அரேபியா
25-பிப்-201219:32:22 IST Report Abuse
jamal அட பண்டார பரதேசி அரசியல்வாதிகளா.உங்கள் வீடுகளில் மட்டும் எல்லாம் ஒழுங்காக நடக்கிறது.ஓட்டு போட்ட நாங்கள் கேனையர்களா? இப்படியெல்லாம் நடக்கும் என்று தெரியாமலா நீங்களும் உங்கள் தானை தலைவியும் (தூ..)எங்களிடம் ஓட்டு பிச்சை வாங்கி ஆட்சியை பிடித்தீர்கள்..பண்ணாடைகளா..உங்களால் திறம்பட ஆட்சியை நடத்த முடியவில்லை என்றால் கவர்னர் ஆட்சிக்கு வழிவிட்டு தேர்தல் நடத்தி புது அரசாங்கத்தை மக்கள் தேர்ந்தெடுக்க வழி வகை செய்யுங்கள்...இப்பொழுதைய சூழ்நிலையில் மக்கள் மிக தெளிவாக யாரை கொண்டுவர வேண்டும் என்கின்ற தெளிவான சிந்தனையில் இருக்கிறார்கள்......தென்காசி ஜமால்...
Rate this:
Share this comment
Cancel
devaraya kumaravel - mysore,இந்தியா
22-பிப்-201201:13:27 IST Report Abuse
devaraya kumaravel When i saw any news about power cut i remember only Vadivel dialauge "இந்த தமிழர்கள் ரொம்ப நல்லவங்க ,எவ்வளவு அடித்தாலும் தாங்கி கொள்வார்கள் , For the last 40 years so much torture given to tamilnadu people by this DMK and ADMK ,still there are people to support them and write comments praising them
Rate this:
Share this comment
Cancel
ashok kumar - coimbatore,இந்தியா
21-பிப்-201202:13:16 IST Report Abuse
ashok kumar கூடங்குளம் மின்சாரம் மொத்தமா தமிழ்நாட்டுக்கே குடுத்தாலும், அரசியல்வாதிகளை வரவேற்பதுக்கும், மேடை பேச்சுக்கும், மின் திருட்டுக்கும், அரசாங்க அதிகாரிகள் ஊழால் பொய் கரண்டு பில்லும் நம்மை ஒரு வருடத்திற்குள் இதே நிலைமையில் கொண்டு வந்து விட்டுரும். கூடங்குளம் திறக்காமல் இருக்கலாம்.
Rate this:
Share this comment
Cancel
Bench Mani - Chennai,இந்தியா
21-பிப்-201202:05:57 IST Report Abuse
Bench Mani குஞ்சுமணி, திரு நங்கைகளுக்கு அரசு வீடுகளில் ஒதுக்கீடு. அவன் கேட்டது கிடைச்சிருச்சு. பாராட்டாம எங்க போய் தொலைஞ்சே.
Rate this:
Share this comment
KAARTHI - Paris,பிரான்ஸ்
25-பிப்-201202:31:12 IST Report Abuse
KAARTHIநேரமில்லை ...அவரு வீட்டு சாமான்கள் வாங்கி போட்டுகிடிருக்கார்........
Rate this:
Share this comment
Cancel
Ebenezar Sundararaj - vellore,இந்தியா
20-பிப்-201223:03:17 IST Report Abuse
Ebenezar Sundararaj thanks dinamalar for accepting the electricity production has gone down from last year, for increasing you can put the blame on people (eventhough its not right) but if the production goes down this it clears shows the inefficiency of the Government. Jaya use to make fun of then Electricity department minister as min vettu thurai amacher but now how to call min rathu thurai amacher ,
Rate this:
Share this comment
Cancel
Nagan Srinivasan - Houston,யூ.எஸ்.ஏ
20-பிப்-201219:57:35 IST Report Abuse
Nagan Srinivasan தமிழக இயற்கை சூழ்நிலைகள், வங்க கடல் வளம் என்று சிறந்து இருந்தும் பின் தங்கிய பொருளாதாரம், பற்றாக்குறை, வேலை இன்மை, வறுமை, வன்முறை என்று வலி பெற்று வாடுவது என். OTEC POWER என்னும் தொழில் நுட்ப கருவியால் 3000 மெகா வாட் மின் உற்பத்தியை பெற முடியும் கடலில் இருந்து. தமிழக மக்களின் தொழில் வளர்ச்சி கடலில் தான் இருகின்றது. நாம் கண்மூடித்தனமாக நிலத்தை நோண்டி, மலையை வெட்டி பயன் இல்லை. கடல் சார்ந்த தொழில்கள் கச்சா எண்ணை எடுத்தல் கனிமம் எடுத்தல் என்று தொழில் வளர்ச்சியை பாருங்கள். இந்த 20 ஆம் நூற்றாண்டில் தமிழர்கள் ஒரு கற்கால வாழ்கையை வாழ்வது தலை குனிய வேண்டிய ஒரு விஷயம். இங்கே கற்றவர்கள் யாரும் இல்லை. கற்றவர்களும் மற்றவர்களும் தொலை நோக்கு இலாது ஒரு கிணற்று தவளை எண்ணங்களோடு வாழ்வது, அரசியல் வாதிகளும் நல்ல உலக அனுபவம் இன்றி தங்கள் நேரத்தை விவாதத்திலே காலம் கழிக்கின்றனர். தயவு செய்து அண்டை நாடுகளை பாருங்கள். குறிப்பாக ஐரோப்பா குளிர் தேசங்களை பாருங்கள். இவர்கள் குளிரில் வாடினாலும் கடல் தான் இவர்களுக்கு செல்வம். கப்பல் கட்டுவார்கள் நார்வே பின்லாந்த் நெதர்லாந்த் என்று. சீனா கொரிய சிங்கப்பூர் மலேசிய இவர்களும் கப்பல் கட்டி கனிமம் எடுத்தல் கட்ச எண்ணை எடுத்தல் என்று தொழில் இன்றங்கி விட்டனர். நாம் தான் கம்ப்யூட்டர் முன் இருந்து அவுட் சோர்சிங் என்று அண்ணாந்து பார்த்து உண்ட்கார்த்திருகின்றோம். கரண்ட் எப்படி வரும் வானத்தில் இருந்தா. இந்த அப்துல் கலாம் வேறு வின் என்று விண்ணிலேயே பறந்துகொண்டு இந்தியாவை பால் படுத்தி விட்டார். பயன் படும் தொழில் நிறுவனங்கள் விண்ணில் இல்லை கடலில் தான். இந்திய கடல் சார்ந்த கல்வி தொழிலில் மிகவும் பின்தங்கி உள்ளது. LnT போன்ற நிறுவனங்களும் பயன் இல்லை. OTECPOWER ஓன்று தான் தமிழகத்துக்கு விடிவு காலம்.
Rate this:
Share this comment
Cancel
sundaram - Coimbatore,இந்தியா
20-பிப்-201219:07:31 IST Report Abuse
sundaram ஆங்கிலத்தில் ஒரு ( பழமொழி மாதிரி ) சொல் வழக்கு ஓன்று உண்டு. There are three Kinds of Lies , They are (1) Lies, (2) Damn Lies and (3) statistics. மின்வாரிய அதிகாரிகள் தங்களது அரசியல் சார்புத்தன்மையை மறைக்கவும் யாரையோ மகிழ்விப்பதற்காகவும் இப்படி வெத்துவேட்டு புள்ளி விவர அறிக்கையை கொடுத்து ஆளுங்கட்சியை சங்கடப்படுத்துகிறார்கள். ஆண்டுக்கு ஆண்டு இயந்திரங்களின் தேய்மானத்தால் உற்பத்தி குறையும் என்பதும் வளர்ந்து வரும் நாடு என்பதால் தேவை உயரும் என்பதும் இவர்களுக்கு இன்னமும் தெரியாமல் அதிகாரிகளாக பவனி வந்தால் அரும்பாடுபட்டு கலைஞர் கொண்டுவந்த மின்வெட்டு திட்டத்தை தமிழ்நாட்டை விட்டு விரட்டவே முடியாது. இப்படிப்பட்ட அதிகாரிகள் வாராவாரம் பாராட்டுகூட்டத்துக்கு ஒளிவெள்ளம் ஏற்படுத்தினார்களே எங்கிருந்து எப்படி? இப்போது அந்த மின்சக்தி எல்லாம் என்ன ஆயிற்று? கேட்பவன் கேனையனா இருந்தா குசுப்பு கொண்டையில கே டி வி தெரியுதுன்னு சொல்லுவாங்க போல இருக்கு.
Rate this:
Share this comment
Cancel
rravi - coimbatore,இந்தியா
20-பிப்-201216:49:09 IST Report Abuse
rravi மிக பெரிய கம்பெனிகள் பல்புகளை அதிக வெளிச்சம் தருமாறு தயாரிக்கின்றன. மிக பெரிய துணிக்கடைகள் அதை ஓட்டைக்குள் பொருத்தி பத்து சதவீதம் வெளிச்சமே கிடைக்கிறது. என்னே நமது புத்திசாலித்தனம்.
Rate this:
Share this comment
Cancel
vaigai r - Ramanathapuram,இந்தியா
20-பிப்-201215:29:37 IST Report Abuse
vaigai r ஒவ்வொரு பேருந்து நிறுத்ததிலும் விளம்பர பலகைக்கு 20 முதல் 30 tube லைட் பயன்படுத்த படுகிறது ... சென்னை மற்றும் பெரு நகரங்களில் பிலமென்ட் லாம்ப் மூலம் சாலைகளிலும் தனியார் நிறுவனங்களிலும் இரவை பகலாக மாற்றும் holozen விளக்குகள் பயன் படுத்த படுகிறது அது அதிக வெப்பத்தையும் குறைந்த ஒளியை மட்டுமே தருகின்றது .10 holezen விளக்கை அணைத்தால் எங்கள் கிராமம் முழுமைக்கும் மின்சாரம் கிடைக்கும் . ஆடம்பர விளக்குகளை அகற்றவேண்டியது யார் கடமை. ? மின் திருட்டு போகின்றது என்கிறார்கள் அதை thadupathu யார் கடமை ? solar panel களை குறைந்த . விலைக்கு கொடுத்தால் எவளோவோ பணம் மிச்சம்
Rate this:
Share this comment
Balu - Bangalore,இந்தியா
22-பிப்-201215:31:36 IST Report Abuse
BaluYou are correct. Govt should ban on using hi-voltage consuming sign boards / commercial hoardings. One thing everybody not noticed is Induction Stoves. Now a days this has been increased in city and you can see the TV ads and free bees given for this product. Govt should ban Induction stoves usage which consumes 2000Watts in each house....
Rate this:
Share this comment
Cancel
selva kumar - tirupur,இந்தியா
20-பிப்-201215:04:01 IST Report Abuse
selva kumar மின்வெட்டுக்கு காரணம் கண்டுபித்தவருக்கு... இப்படி ஒரு நிலை ஏற்படும் என்பதை முன்கூட்டியே அறிந்திருபார்.. இது போன்ற அதிகாரிகளை கண்டுபித்து எதிர்காலத்தில் என்ன நிகழ்வுகள் ஏற்டும் என்பதை அறிந்து... அரசாங்கம் செயல்பட்டால் நன்றாக இருக்கும்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X