காரைக்கால்:காரைக்காலில் தனியார் கல்லூரி முதல்வர், திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கற்பழித்துவிட்டதாக பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து கல்லூரி முதல்வரை தேடி வருகின்றனர்.மதுரை சுப்ரமணியபுரத்தைச் சேர்ந்த சாலமன் தேவதாஸ்,45. நாகப்பட்டினத்தில் உள்ள தனியார் கல்லூரியில் முதல்வராக பணியாற்றி வருகிறார். மனைவியுடன் விவாகரத்து பெற்ற இவர் தனது 16 வயது மகளுடன் காரைக்கால் எம்.எம்.ஜி.நகர் விரிவு 8 வது குறுக்கு தெருவில் வசித்து வருகிறார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஏஞ்சலின் ஜெசினா,35. ஸ்ட்காட்லாந்தில் பட்டம் பெற்றுள்ளார். குடும்ப பிரச்னை காரணமாக விவாகரத்து பெற்றுள்ளார்.
இவருக்கு 11 வயதில் மகன் உள்ளார்.இருவரும் சுற்றுலா சென்றபோது, பொள்ளாச்சியில் சந்தித்துள்ளனர். இருவரும் விவாகரத்து பெற்றுள்ளதால் திருமணம் செய்து இணைந்து வாழ முடிவு செய்தனர். 2011ம் ஆண்டு நவம்பர் மாதம் நாகப்பட்டினத்தில் தான் வேலை செய்யும் தமது கல்லூரிலே வேலை வாங்கி தருவாக கூறி ஏஞ்சலின் ஜெசினாவை காரைக்காலுக்கு அழைத்து வந்து தனது வீட்டிலே தங்க வைத்துள்ளார். கடந்த 2 அரை மாதங்களாக இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.
சாலமன் தேவதாசின் மெயில், போனில் பல பெண்களுடன் தொடர்பு கொள்வது குறித்து ஏஞ்சலின் கேட்டபோது, இருவருக்கும் தகராறு நடந்துள்ளது. இதனிடையே ஏஞ்சலினிடம் இருந்து 25 ஆயிரம் பணம் வாங்கியுள்ளார். மேலும், தான் வாங்கவுள்ள புதிய காருக்கு 2 லட்சம் பணம் கேட்போது சாலமனுக்கும், ஏஞ்சலினுக்கும் மேலும் தகராறு வலுத்தது. இருவரும் மாறி மாறி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி இருவரையும் சாமாதானப்படுத்தினர். அப்போது, சாலமன், ஏஞ்சலினுக்கு விவகாரத்து கிடைத்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் எழுதி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஏஞ்சலின் தந்தையை நாகப்பட்டினம் பஸ் நிலையத்திற்கு வழியனுப்பி விட்டு திரும்பும் போது, காரில் இருந்து இறங்கிய சாலமன் மாயமானர். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
ஏஞ்சலின் மகளிர் போலீஸ் நிலையத்தில், சாலமன் தன்னை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி கற்பழித்துவிட்டதாக புகார் அளித்தார். அதன்பேரில் சப்இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) லோகநாதன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், ஏஞ்சலினுக்கு நேற்று காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.