தமிழ்நாடு

அரசுப் பள்ளியில் மதப் பிரசாரம் ஆசிரியைகள் இடமாற்றம்

Added : பிப் 23, 2012 | கருத்துகள் (4)
Share
Advertisement
திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம், முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், மதப் பிரசாரம் செய்ததாக, தலைமை ஆசிரியை உட்பட இருவர் மாற்றம் செய்யப்பட்டனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாமேரி, ஆசிரியர் கிறிஸ்டிரோசாரி. இவர்கள், மாணவர்களிடம் மதப் பிரசாரம் செய்வதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, உதவி அலுவலர்கள்

திண்டுக்கல்: திண்டுக்கல் நத்தம், முசுக்கம்பட்டி ஊராட்சி ஒன்றிய பள்ளியில், மதப் பிரசாரம் செய்ததாக, தலைமை ஆசிரியை உட்பட இருவர் மாற்றம் செய்யப்பட்டனர். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் ஸ்டெல்லாமேரி, ஆசிரியர் கிறிஸ்டிரோசாரி. இவர்கள், மாணவர்களிடம் மதப் பிரசாரம் செய்வதாக, அப்பகுதியினர் புகார் தெரிவித்தனர். மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் தமிழ்ச்செல்வி, உதவி அலுவலர்கள் முத்தம்மாள், ஷாஜகான் விசாரித்தனர். பாதிரியார் ஒருவர், தலைமை ஆசிரியரின் இருக்கையில் அமர்ந்து இருப்பதும், தலைமை ஆசிரியை அருகே நின்று கொண்டிருப்பதையும், மொபைல் போன் கேமராவில் பதிவு செய்து, ஆதாரமாக அப்பகுதியினர் காட்டினர். இதையடுத்து, இரு ஆசிரியர்களும் வருத்தம் தெரிவித்தனர்.இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்குனர் சங்கருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. இருவரையும் வேறு பள்ளிகளுக்கு மாற்ற, அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து மதப் பிரசாரம் செய்தால், சஸ்பெண்ட் செய்யப்படுவர் என, அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Prakash Goli - Chennai,இந்தியா
23-பிப்-201208:38:42 IST Report Abuse
Prakash Goli This is very sad. There is a clear and planned attack on the education tem by the fundamentalists group. They are also trying to do the same in the media world. People be aware.
Rate this:
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-பிப்-201207:34:41 IST Report Abuse
ஆரூர் ரங மத மாற்றத் தடைச்சட்டம் உடனே அமல்படுத்தப்பட வேண்டும். மதம் மாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்டு , தேச ஒற்றுமையைக் குலைக்க முயற்சிப்பவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டப்படி நிரந்தரமாக சிறையில் அடைக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
Mohd. Rias - Kuala Lumur,மலேஷியா
23-பிப்-201205:25:06 IST Report Abuse
Mohd. Rias அமைதியான மக்களிடையே "மதம்" பிடிக்க துணை போகும் இவர்களும் தேச துரோகிகளே. இவர்களை, இட மாற்றம் செய்யாது நாடு கடத்த வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X