ராகுல் பிரசாரம் பலன் தராது : அகிலேஷ் யாதவ்

Added : பிப் 23, 2012
Share
Advertisement

லக்னோ : உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டசபை தேர்தலில், ராகுல் மேற்கொண்ட பிரசாரத்தின் மூலம் அக்கட்சிக்கு எவ்வித பலனும் ஏற்படப் போவதில்லை என்று உ.பி. மாநில முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்வின் மகனும், தற்போதைய சமாஜ்வாடி கட்சி வேட்பாளருமான அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். தனியார் செய்தி சேனல் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது, இந்தியா ஜனநாயக நாடு, எனவே, எந்த மாநிலத்திலும், யார் வேண்டுமானாலும் வந்து தேர்தல் பிரசாரம் செய்யலாம். இதனை யாரும் தடுக்க முடியாது. உ.பி. மாநிலத்தில் ராகுல் மேற்கொண்ட தேர்தல் பிரசாரத்தின் மூலம் எவ்வித பலனும் ஏற்படப்போவதில்லை. பலன் கிடைக்கும் என்று எதிர்பார்த்தால் அது அவர்களின் முட்டாள்தனம் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X