சம்பவம் செய்தி

தமிழ்நாடு

என்.ஜி.ஓ.க்களுக்கு வந்த பணம் : நாராயணசாமி பகீர்

Added : பிப் 27, 2012 | கருத்துகள் (2)
Advertisement

தூத்துக்குடி : கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு போராட்டத்திற்கு பயன்படுத்துவதற்காக அரசு சாரா நிறுவனங்களுக்கு வெளிநாடுகளிலிருந்து வந்த பணத்தின் மதிப்பு குறித்து மத்திய அமைச்சர் நாராயணசாமி பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் நாராயணசாமி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, கிறித்தவ பேராயர் யோவான் ஆம்புரோசுக்கு தொடர்புடைய 2 நிறுவனங்கள் மற்றும் சாக்கர் என்ற மற்றொரு அரசு சாரா நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து பணம் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதற்கான உரிமங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு மட்டுமல்லாது, அவர்களிடள் விளக்கம் கேட்டு நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. சாக்கர் என்ற நிறுவனத்திற்கு சுவீடன் நாட்டிலிருந்து முதற்தவணையாக ரூ. 38 லட்சமும், மற்றொரு முறையாக ரூ. 5.2 கோடியும் வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்றும், கூடங்குளம் எதிர்ப்புக் குழு போடும் எவ்வித அவதூறு வழக்கையும் எதிர்கொள்ள அரசு தயாராக இருப்பதாக அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Deepak - Nellai,இந்தியா
27-பிப்-201217:01:25 IST Report Abuse
Deepak பணம் வந்தது கண்டு பிடித்தது இருக்கட்டும், உரிமம் ரத்து செய்யப்பட்டது இருக்கட்டும். இந்த தேச துரோகிகளை சிறைக்கு அனுப்பாமல் ஏன் சவால் விட்டு கொண்டு இருக்கிறீர்கள். மறைமுகமாக இந்த தீவிரவாதிகளை வளர்த்து விடாதீர்கள்
Rate this:
Share this comment
Cancel
K. Rajan - Tirunelveli ,இந்தியா
27-பிப்-201214:01:59 IST Report Abuse
K. Rajan போராட்டம் நடத்துவது கூடங்குளம் பகுதி மக்கள். தொண்டு நிறுவனங்களுக்கும் போராட்ட குழுவிற்கும் சம்பந்தமில்லை. தொண்டு நிறுவனங்களின் மீது தவறு இருப்பின் நடவடிக்கை எடுக்க யார் குறுக்கே இருக்கிறார்கள். தொண்டு நிறுவங்களுக்கு அரசு விதியின் படி பணம் வந்து கொண்டுதான் இருக்கும். அரசு அனுமதிக்க வில்லையெனில் பாதிக்கப்படுவது போராட்ட குழு அல்ல, அந்த தொண்டு நிறுவனங்களினால் பயன் பெரும் இந்திய ஏழை மக்களே. பொய்யர் நாராயணசாமி திசை திருப்பும் நடவடிக்கைகளில் ஈடு பட்டு வருகிறார். நடப்பது ஐக்கிய முன்னணியின் ஆட்சி. அந்த ஐயக்கிய முன்னணியின் தலைவி "தனது சொத்து விபரங்களை" தகவல் அறியும் சட்டத்தின் கீழ் வெளியிட மறுக்கிறார், ஆனால் அதனை ஆமோதிக்கும் பொய்யர் நாராயணசாமி, ஏழை மக்கள் நடத்தும் போராட்டத்தின் பணம் வரவு செலவு கணக்கை கேட்கிறார். பிரச்சனை சமாளிக்க, மக்களை தன்பால் ஈர்பதற்கு பதில், போராடும் மக்களை கேவலபடுத்தும் செயலில் ஈடுபட்டு, அவர்களின் எதிர்ப்பை மேலும் வளர்கிறார் பொய்யர் நாராயணசாமி. இவருக்கு மத்திய அரசாங்கத்தில் மந்திரி பதவி? இந்திய நாட்டில் தனது செயலினால், தீவிரவாதிகளை உண்டாக்குவதில் பெரும் பங்கு காங்கிரசுக்கு உண்டு.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X