பொது செய்தி

இந்தியா

இவர் இப்படி : கணித துறையில் கவுரவம் தந்த பேராசிரியர் -

Added : பிப் 28, 2012 | கருத்துகள் (5)
Share
Advertisement
நமது சிறப்பு நிருபர் - என்றுமே கணித அறிவில், இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வேதகாலத்தை ஆராய்ந்தால், ஜியோமிதி கணக்கு முறைக்கு அதிக மதிப்பும் மவுசும் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே பித்தகோரஸ் தியரம் பற்றிய கணிதக்கூறுகளை இந்தியர் அறிந்திருந்தனர். அதே போல பூஜ்யத்தின் மதிப்பையும் அறிந்தவர்கள் இந்தியர்கள் .அறிவியல் அறிஞர்களாக
 இவர் இப்படி : கணித துறையில் கவுரவம் தந்த பேராசிரியர் -

நமது சிறப்பு நிருபர் -
என்றுமே கணித அறிவில், இந்தியாவுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. வேதகாலத்தை ஆராய்ந்தால், ஜியோமிதி கணக்கு முறைக்கு அதிக மதிப்பும் மவுசும் உண்டு. கிறிஸ்து பிறப்பதற்கு 800 ஆண்டுகளுக்கு முன்பே பித்தகோரஸ் தியரம் பற்றிய கணிதக்கூறுகளை இந்தியர் அறிந்திருந்தனர். அதே போல பூஜ்யத்தின் மதிப்பையும் அறிந்தவர்கள் இந்தியர்கள் .அறிவியல் அறிஞர்களாக மதிக்கப்பட்டு, உலக சமுதாயத்தால் ஏற்கப்பட்டு, அவர்கள் கையொப்பம் பதித்த ஆவணம் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டியில் இருக்கிறது. பிரபல விஞ்ஞானி ஐசக் நியூட்டன் இதில் கையொப்பமிட்டிருக்கிறார். அதில் சமீபத்தில் கையொப்பமிட்ட பேராசிரியர் எம்.எஸ்.ரகுநாதன் நமக்கு பெருமை சேர்த்தவர் ஆவார். வரலாற்றுப்புகழ் மிக்க கணித மேதை ஸ்ரீநிவாச ராமானுஜம், சி.எஸ். சேஷாத்ரி, எம்.எஸ். நரசிம்மன் வரிசையில் இவர் இடம் பெற்றிருக்கிறார்.இவர், டாடா பண்டமென்டல் ரிசர்ச் இன்ஸ்ட்டியூட்டில் முக்கியப் பேராசிரியர் பதவி வகிக்கிறார். இவர் தன் 19 வது வயதில், இந்த நிறுவனத்தில் சேர்ந்தார்.ஆந்திராவில் வாழ்ந்த தன் மாமா வீட்டில், கடந்த 1941ல் பிறந்த இவர், முழுப்பெயர் மாடபூசி சந்தானம் ரகுநாதன் என்பதாகும். இவர் தந்தை, சென்னையில் மரக்கடை வைத்து வியாபாரம் நடத்தியவர். மயிலை பி.எஸ்.மேனிலைப் பள்ளியில் படித்த இவர், விவேகானந்தா கல்லூரியில் பி.ஏ (ஹானர்ஸ்) பட்டப்படிப்பு முடித்தவர். பின்பு டாடா ஆய்வகத்தில் சேர்ந்து பி.எச்.டி., பட்டத்தையும் பெற்றார்.கணிதத்தில் சிறந்த ஆய்வுகளை மேற்கொண்ட இவருக்கு, சாந்தி சுவரூப் பட்நாகர் விருதும், பின்னர் ராமானுஜம் பதக்கமும் கிடைத்தன. தற்போது இவருக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருக்கிறது என்பது கணிதத்திற்கு கிடைத்த கவுரமாகும். ஆனால், இந்திய கணித இயல் துறையின் கவுரவத்தைக் கட்டிக்காத்த பெருமகன்களின் வரிசையில் இவர் முன்னிற்கிறார்.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jegan - chennai,இந்தியா
28-பிப்-201223:01:34 IST Report Abuse
Jegan அய்யா எம் எஸ் ரகுநாதனுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்களும் வணக்கங்களும். மேலும் பல சாதனைகளை செய்து பார் போற்றும் பேறு பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
Rate this:
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
28-பிப்-201222:30:04 IST Report Abuse
thamizh Madayan இந்த பாடலைப் பற்றி கொஞ்சம் வலையில் தேடினேன். எழுதியவர் பெயர் போதாயனர். காலம் சும்மா இஷடத்துக்கு பொ ச மு ( பொது சகாப்தம் முன் ) 2000 என்றெல்லாம் சொல்கிறார்கள். அவரைப் பற்றி இந்த பாடலைத் தவிர வேறு நம்பக்கூடிய செய்திகள் இல்லை. பிதாகரஸ் தேற்றம் இரண்டாம் அடுக்கு பர்கோவையை ( second order polynomial ) அடிப்படையாகக் கொண்டது. வர்க்க மூலம் இல்லாத எந்த தீர்வும் ( solution ) சரியாக இருக்க முடியாது என்பது கணிதத்தில் மிகவும் தெளிவு ( mathematically obvious). இதை முழுதாகப் புரிந்து கொள்ளாத பலர் வர்க்க மூலம் இல்லாததை பெருமையாகக் கூறுகின்றனர். கட்டிடம் கட்டுதல், நிலத்தை அளத்தல், இதற்கான அளவு கருவிகள் செய்தல் போன்ற காரியங்களை இந்த பாடலை அடிப்படையாகக் கொண்டு செய்யலாம். அதற்க்கு மேல் எல்லா செங்கோண முக்கோணங்களின் கரணங்களையும் இப்பாடலால் அறிய முடியாது. இப்பாடலின் காலம் சரியாக அளவிடப்பட்டால் இது சரித்திரப் பூர்வமான முக்கிய தகவல் ஆகும். ஆனால் இன்றைய கணிதத்துக்கு இது ஒரு curiosity அவ்வளவுதான். ஒரு வேளை போதாயனர் என்ற பெயர் கூட பித்தாகரர் இன்ற பெயரின் மருவு அல்லது தற்பவம் ( cognate) ஆக இருக்கலாம்.
Rate this:
Cancel
thamizh Madayan - வெத்தலப் பாக்கம் (Bethel Park),யூ.எஸ்.ஏ
28-பிப்-201222:08:52 IST Report Abuse
thamizh Madayan தமிழில் பித்தாகராஸ் தேற்றம்: "ஓடும் நீளத்தை எண்கூராக்கி, அதில் ஒன்றைத் தள்ளி, குன்றத்தில் பாதி சேர்த்தால் வருவது கர்ணம் தானே " என்னும் செய்யுள் பித்தகராஸ் தேற்றத்தில் ஒரு வகை. எல்லோருக்கும் தெரியும் 3 , 4 5 பக்கம் அளவுள்ள முக்கோணம் செங்கோண முக்கோணம். இதன் கர்ணம் ( hypotenuse ) 5 . ஓடும் நீளம் = 4 எட்டு பாகம் ஆக்கி ஒன்றைத் தாளினால் 3 . 5 . குன்றம் என்றால் உயரம் அது 3 . அதில் பாதி 1 . 5 . சேர்த்தால் 3.5 + 1.5 = 5 = hypotenuse = கர்ணம் இந்த செய்யுள் எங்கிருந்து வந்தது எவ்வளவு தொன்மையானது என்று எனக்குத் தெரியாது. இது முழு தேற்றம் அல்ல. இது (3,4,5) போன்ற செங்கோண முக்கோணங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X