என் நாடு, என் மக்கள், என் புகைப்படங்கள்- கல்பனா சாட்டர்ஜி| Pokkisham_ Kalpana Chattergi | Dinamalar

என் நாடு, என் மக்கள், என் புகைப்படங்கள்- கல்பனா சாட்டர்ஜி

Updated : மார் 07, 2012 | Added : மார் 03, 2012 | கருத்துகள் (1)
Share
கல்பனா சாட்டர்ஜி, பனிபடர்ந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே-லாடக் பகுதியில் கணவர் குழந்தைகளுடன் வசிக்கிறார்; கணவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளை கம்பீரத்துடனும், கலை அழகுடனும் பார்க்கும் வாய்ப்பு உருவானது. கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட புகைப்பட ஆர்வம், இது மாதிரியான இடங்களை பார்த்ததும் மீண்டும் துளிர்க்கவே, கணவரின் ஆதரவுடன் 'பாயின்ட்

கல்பனா சாட்டர்ஜி,

பனிபடர்ந்த ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லே-லாடக் பகுதியில் கணவர் குழந்தைகளுடன் வசிக்கிறார்; கணவர் ஒரு ராணுவ அதிகாரி என்பதால் நாட்டின் பல்வேறு பகுதிகளை கம்பீரத்துடனும், கலை அழகுடனும் பார்க்கும் வாய்ப்பு உருவானது. கல்லூரியில் படிக்கும் போது ஏற்பட்ட புகைப்பட ஆர்வம், இது மாதிரியான இடங்களை பார்த்ததும் மீண்டும் துளிர்க்கவே, கணவரின் ஆதரவுடன் 'பாயின்ட் அண்ட் சூட்' வகை கேமிராவை வாங்கி படமெடுக்க துவங்கினார்.


புத்தகங்கள், வலைத்தளங்கள் மூலமாக தனது கேமிரா அறிவை வளர்த்துக் கொண்டார். அந்த கேமிராவில் இவர் எடுத்த படங்கள் வலைத்தளத்தில் உலா வந்தபோது பல மடங்கு பாரட்டும், வரவேற்பும் இருந்தது. இதன் காரணமாக டிஜிட்டல் எஸ்எல்ஆர் கேமிராமிற்கு மாறினார். இதில் எடுத்த படங்கள் இன்னும் பெரிய வரவேற்பை தந்தது.


இவருக்கு நமது நாட்டின் கலாச்சாரத்தை, பண்பாட்டை,கலையழகை, மக்களை பதிவு செய்வதில் அலாதி பிரியம். கடந்த 6 மாத காலமாக 'லடாக்' இன மக்களின் வாழ்க்கையை பதிவு செய்வதில் மும்முரமாக உள்ளார். இதற்காக இவர் தரும் உழைப்பு கடுமையானது என்றாலும் தனது உழைப்பு, தனது முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு பெரிய ஆவணமாக இருக்கும் என்பதால் சந்தோஷமே என்கிறார்.


- -எல்.முருகராஜ்


Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X