மும்பை தாக்குதல்: இந்தியா வந்தது பாக்.குழு

Updated : மார் 15, 2012 | Added : மார் 15, 2012
Share
Advertisement

புதுடில்லி: மும்பை தாக்குதல் வழக்கின் பாகி்ஸ்தான் விசாரணை குழு இந்தியா வந்தது. நாளை மும்பை தாக்குல வழக்கின் முக்கிய ஆவணங்களை ஆய்வு செய்கின்றனர்.. மும்பையில் கடந்த 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ம் தேதி பயங்கரவாதிகள் ,கடல்வழியாக ஊடுருவி நடத்திய தாக்குதலில் 160-க்கும் மேற்பட்டோர் பலியாயினர். பலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் 10 பயங்கரவாதிகள் ஈடுபட்டனர். 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அஜ்மல்கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் பிடிப்பட்டான். அவனுக்கு மும்பை ஐகோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டில் ‌அப்பீல் விசாரணை நடந்து வருகிறது.

மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானைச்சேர்ந்த லஷ்கர்-இ-தொய்பா என்றபயங்கரவாத அமைப்பிற்கு இந்த தாக்குதலில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக பாகிஸ்தானின் பயங்கரவாத தடுப்பு கோர்டிலும் வழக்கு நடந்து வருகிறது. பயங்கரவாதி ஜாஹிர் -ரஹ்மான் லக்வி என்பவரே இத்தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டதாக பாகிஸ்தான் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.இந்நிலையில், மும்பை தாக்குதல் சம்பவம் குறித்து ரமேஷ்மொகாலே என்பவரின் தலைமையிலான, ஆர்.வி. சவாந்த், வாஹல் என எட்டு பேர் விசாரணைக்கமிஷன், இன்று நான்கு நாள் பயணமாக இந்தியா நேற்று வந்தது. இக்குழு நாளை (16-ம் தேதி) மும்பை தாக்குதல் சம்பவத்திற்கு எதிராக முக்கிய ஆதாரங்களை திரட்டுகின்றனர். நாளை (15,16) மும்பையில் இரு நாட்கள் முகாமிட்டு முக்கிய அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகின்றனர். பின்னர் சுட்டுக்கொல்லப்பட்ட 9 பயங்கரவாதிகளின் பிரேத பரிசோதனை குறித்த ஆவணங்களையும், தற்போது உயிருடன் சிறையில் உள்ள அஜ்மல்கசாப்பின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதற்கான ஆதாரங்களையும் ஆய்வு செய்கின்றனர். பின்னர் டில்லி சென்று ஆலோசனை நடத்துகின்றது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X