பொது செய்தி

இந்தியா

எனது வருகையை தடுத்ததே காங்கிரஸ் தான்: ருஷ்டி

Updated : மார் 18, 2012 | Added : மார் 18, 2012
Advertisement

புதுடில்லி: அரசியல் ஆதாயத்திற்காகத்தான் என்னை ராஜஸ்தான் இலக்கிய திருவிழாவில் கலந்து கொள்ள விடாமல் காங்கிரஸ் கட்சி சதி செய்துள்ளது என பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கூறினார். டில்லி வந்திருந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான்ருஷ்டி , டில்லியில் நடக்கவுள்ள எழுத்தாளர்களுக்கான கருத்தரங்கில் கலந்து கொள்கிறார். கடந்த ஜனவரி மாதம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் நடைபெற்ற கருத்தரங்கில் ருஷ்டி கலந்து கொள்ள முஸ்லிம் மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதனையடுத்து அவரது உயிருக்கு ஆபத்து என ராஜ்தான் அரசு கூறியதால், அவர் வருகை ரத்து செய்யப்பட்டது. தற்போது டில்லியின் கருத்தரங்கில் கலந்து கொள்வதற்கு முன்னதாக அவர் பேட்டியளிக்கையில், இந்திய மண்ணில் கால் வைக்க இத்தனை எதிர்ப்புகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. எனது வருகையினை எதிர்ப்பதில் அரசியல் காரணங்கள் உள்ளன. இந்தியாவில் தேர்தல் நடந்த நிலையில் முஸ்லிம்களில் ஒட்டுவங்கிக்காக , எனது வருகையினை தடை செய்துவிட்டனர். இதில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்குள்ளது என்றார். முன்னதாக டில்லியில் நடக்கவுள்ள கருத்தரங்கில், முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான், உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவ், காஷ்மீர் முதல்வர் ஒமர்அப்துல்லா உள்ளிட்டோர் புறக்கணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X