சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குண்டு வெடிப்பு கைதி மீண்டும் கைது : மாநில உள்துறை உத்தரவு எதிரொலி

Added : ஜூலை 19, 2010
Share
Advertisement
கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டு வெடிப்பு வழக்கின் முன்னாள் கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது. கோவை நகரில் உள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டு சிறைத் தண்டனை

கோவை : நன்னடத்தை உத்தரவாதத்தை மீறி குற்றத்தில் ஈடுபட்ட குண்டு வெடிப்பு வழக்கின் முன்னாள் கைதி, மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கான உத்தரவை, மாநில உள்துறை செயலகம் பிறப்பித்திருந்தது.


கோவை நகரில் உள்ள கரும்புக்கடை, சாரமேடு பகுதியைச் சேர்ந்தவர் அஷ்ரப்(40). கடந்த 1998ல் கோவை நகரில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். கடந்த ஆண்டில், அண்ணாதுரை பிறந்த நாளில் தண்டனை குறைப்புக்கான தமிழக அரசின் சிறப்பு உத்தரவு மூலம் விடுதலை பெற்றார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் எவ்வித குற்றத்திலும் ஈடுபடக்கூடாது என்ற நன்னடத்தை நிபந்தனையுடன் விடுவிக்கப்பட்டார்.


இந்நிலையில் இவர், திருட்டு "சிடி' பதுக்கிய வழக்கில் கடந்த 5ம் தேதி மாநகர போலீசாரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர், 10ம் தேதி ஜாமீனில் விடுதலையானார். குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகும் போது அளித்த உத்தரவாதத்தை இவர் மீறிவிட்டதாகவும், அவர் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றும், தமிழக சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., அலுவலகம், மாநில உள்துறைக்கு பரிந்துரைத்தது. உள்துறை பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து நடவடிக்கை மேற்கொண்ட கோவை சி.பி.சி.ஐ.டி., (எஸ்.ஐ.டி.,) போலீசார், அஷ்ரப்பை மீண்டும் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நன்னடத்தை நிபந்தனையை மீறி குற்றத்தில் ஈடுபட்டு மீண்டும் கைதாகியுள்ள நபர், குண்டு வெடிப்பு வழக்கில் முன்னர் விதிக்கப்பட்ட தண்டனை காலம் முடியும் வரை சிறையில் இருப்பார். இவருக்கு மீண்டும் தண்டனை குறைப்பு வழங்கப்பட மாட்டாது' என்றார்.


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X