ராஜபாளையம் :கோடைகாலத்தில் பயன்படும் தென்னங்கிடுகுகளுக்கு போதிய விலை இன்றி , முறையான கூலி இல்லாமல் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளதால் ,இதன் தொழில் நலியும் நிலையில் உள்ளது.
கோடை வந்தாலே வெப்பத்தை தணிக்க கடை, வீடுகள் முன் வேனல்பந்தல் அமைக்கப்படும். இதற்கு தென்னங்கிடுகுகள் தேவைப்படும். தென்னங் கிளையை வெட்டி காயப்போட்டு, தண்ணீரில் ஊறவைத்து கிடுகுகள் செய்யப்படுகின்றன. இதன் ஒரு கட்டில் சிறிய கிடுகுகள் 50 , பெரிய கிடுகுகள் 5 ம் இருக்கும். லாபமுள்ள தொழிலாக இது இருந்ததால் பெண்கள் என பலரும் இதில் ஈடுபட்டனர். தற்போது சரியான கூலி இல்லாததால், ஆள்பற்றாக்குறை ஏற்பட்டு உள்ளது. இதனால் கிராமங்களில் சிலர் மட்டுமே இதில் ஈடுபடுகின்றனர்.
ராஜபாளையம் முத்துசாமி, ""கடந்த ஆண்டு கோடையில் சிறிய கிடுகு கட்டுரூ.60 , பெரிய கிடுகு கட்டு ரூ .150 க்கு விற்றது. கட்டுப்படியாகாவிட்டாலும் தொழிலை செய்தோம். இந்த ஆண்டு சிறிய கட்டிற்கு ரூ. 45 , பெரிய கட்டிற்கு ரூ. 130 மட்டுமே கிடைக்கிறது. இதில் வருமானம் குறைந்ததால், மாற்று தொழிலுக்கு பலர் சென்றுவிட்டனர். பங்குனி இறுதியில் வேனப்பந்தல் அமைக்கும்போது கிடுகு தேவை அதிகமாகும். மேலும், வெங்காய விலைச்சல் அதிகமாக இருப்பதால், பந்தாடை அமைக்க கிடுகுகள் அதிகம் தேவைப்படும். கூலியும் அப்போது தான் உயரும் என எதிர்பார்க்கிறோம்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE