பொது செய்தி

இந்தியா

கோவிலில் காதல் விவகாரங்களைப் பேசாதீர்கள்:திருமலையில் நடிகை நயன்தாரா குமுறல்

Added : மார் 22, 2012 | கருத்துகள் (3)
Advertisement
கோவிலில் காதல் விவகாரங்களைப் பேசாதீர்கள்:திருமலையில் நடிகை நயன்தாரா குமுறல்

நகரி:"என் வாழ்க்கையில் முதன்முதலாக திருமலை கோவிலுக்கு வந்து, வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தது, மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. புண்ணிய தலமான திருமலையில், என் காதல் விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்ப வேண்டாம்' என, நடிகை நயன்தாரா தெரிவித்தார்.அவர் நேற்று முன்தினம், தன் குடும்பத்தினருடன் திருமலையில், மூலவர் வெங்கடேச பெருமாளை தரிசனம் செய்தார். கல்யாண உற்சவ சேவைக்கு பின் வைகுண்டம், 1வது கியூ வரிசையில், 30 நிமிடங்கள் வரை காத்திருந்தபடி, சக பக்தர்களுடன் பேசியபடி, கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.


கோவில் சன்னிதியில், கியு வரிசையில் நடிகை நயன்தாரா வருவதை கண்ட பக்தர்கள், அவர் அருகே செல்ல முயற்சித்ததால், சில நிமிடங்கள் சலசலப்பு ஏற்பட்டது. பின், தன் பிரார்த்தனையாக, கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்.கோவிலுக்கு வெளியே நிருபர்களிடம் அவர் கூறுகையில், "எனது வாழ்க்கையில் முதன் முறையாக வெங்கடேச பெருமானை தரிசித்தேன். அவரது அருளாசியை பெற்றேன். நான் இப்போது, மகிழ்ச்சியாக உள்ளேன்' என்றார்.அப்போது நிருபர்கள் சிலர், "நடிகர் பிரபுதேவாவுடனான உங்கள் காதல் விவகாரம் என்ன ஆயிற்று?' என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நயன்தாரா, "புண்ணிய தலமான திருமலையில், இது போன்ற காதல் விவகாரங்களை விவாதிப்பதும், அதற்கு நான் பதிலளிப்பதும் நல்லது தானா?' என, கேள்வி எழுப்பினார். பின்னர் குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்றார்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - coimbatore,இந்தியா
23-மார்-201212:18:10 IST Report Abuse
sridhar சாத்தான் வேதம் ஓதுகிறது.......
Rate this:
Share this comment
Cancel
nandaindia - Vadodara,இந்தியா
23-மார்-201210:49:26 IST Report Abuse
nandaindia நல்ல பதில் நயன்தாரா அவர்களே. வாழ்த்துக்கள்
Rate this:
Share this comment
Cancel
ஆரூர் ரங - chennai,இந்தியா
23-மார்-201207:00:15 IST Report Abuse
ஆரூர் ரங மிஸ் டயானா. எத்தனை படங்களில் கோவிலுக்குள் காதல் காட்சிகள் டூயட் பாடி நடிச்சிருக்கறீங்க? இப்போது என்ன திடீர் திருப்பதி பக்தி?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X